சர்க்கரை வள்ளிக்கிழங்கு நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் சிறந்த மூலமாகும். இந்த உணவு’ குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. எடை குறைவாக உள்ள குழந்தைகளின் எடை அதிகரிப்பையும் இது ஆதரிக்கிறது.
செய்முறை இதோ:
தயாரிப்பு நேரம் – 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள்:
மீடியம் சைஸ் சர்க்கரை வள்ளிக்கிழங்கு- 2
வேகவைத்த பால் – ¾ கப்
வெல்லம் – 2 டீஸ்பூன்
குங்குமப்பூ – 1-2 இழைகள்
நெய் – 1 டீஸ்பூன்
ஏலக்காய் தூள் – ¼ தேக்கரண்டி
நறுக்கிய உலர் பழங்கள் – 2 டீஸ்பூன்
எப்படி செய்வது?
சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து, நன்றாக மசிக்கவும்.
ஒரு கடாயில் நெய் சேர்த்து முதலில் உலர்ந்த பழங்களை வறுத்து, அதனுடன் மசித்த கிழங்கைச் சேர்த்து, சிறிது தங்க நிறத்தில் மாறும்வரை நன்கு வறுக்கவும்.
அதனுடன் வெல்லம் சேர்த்து நன்கு கிளறவும்.
அதனுடன் வேகவைத்த சூடான பாலில் குங்குமப்பூ இழைகளுடன், ஏலக்காய் தூள் கலந்து சேர்க்கவும்.
இதை 3-4 நிமிடங்கள் சமைத்து சூடாக பரிமாறவும்.
இது 1-3 வயதுள்ள குழந்தைகளுக்கும் ரொம்ப நல்லது. அதனால் எந்த பயமும் இல்லாமல் அனைவரும் சாப்பிடலாம்!!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“