பொதுவாக நாம் அனைவருமே பெரும்பாலும் அடுப்பில் வைத்து சமைத்த உணவைத்தான் சாப்பிடுகிறோம். ஆனால் அடுப்பில் சமைக்காத உணவும் இருக்கிறது என்பது நம்மில் பலருக்கும் தெரியாத ஒன்று. அந்த வகையில் அடுப்பு மற்றும் நெருப்பு இல்லாமல் அவல் பாயாசம் செய்வது எப்படி என்பதை பார்ப்போமா?
Advertisment
தேவையான பொருட்கள்
அவல் – 100 கிராம்
வாழைப்பழம் – 3 அல்லது 4
தேங்காய் – 1
நாட்டுச்சக்கரை – ஒரு டீஸ்பூன்
முந்திரி பருப்பு – 10-15
உலர் திராட்சை – 10-15
ஏலக்காய் பவுடர் – கால் டீஸ்பூன்
செய்முறை
முதலில் அவலை குறைந்தபட்சம் 2 அல்லது 3 மணி நேரம் நன்றாக ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும். தேங்காய்யை உடைத்து அதில் இருந்து தேங்காய் பால் எடுத்து வைத்துக்கொள்ளவும். அதன்பிறகு அவல் ஊறிய பின் அதில் வாழைப்பழத்தை சேர்த்து நன்றாக மசித்துவிடவும்.
அதன்பிறக நாட்டுச்சக்கரை, ஏலக்காய் பொடி, உலர் திராட்சை, முந்திரி, ஆகியவற்றை சேர்த்து நன்றாக மசித்துவிடவும். இந்த கலவையை தேங்காய் பாலில் கலந்து நன்றாக கிளறி எடுத்தால் சுவையான அவல் பாயாசம் ரெடி. முற்றிலும் இயற்கை பொருட்களை வைத்து தயாரிக்கப்படும் இந்த ரெசிபி உடலுக்கு மிகவும் நல்லது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“