ஹெல்தி ஸ்நாக்ஸ் ரெசிபி: தஞ்சாவூர் பாரம்பரிய ஒரப்படை; இப்படி செய்து பாருங்க!
சம்மரில் வீட்டில் இருக்கும் உங்கள் பிள்ளைகளுக்கு செய்து கொடுக்க ஈஸியான ஒரு ஸ்நாக்ஸ் அதுவும் தஞ்சாவூரில் மிகவும் ஸ்பெஷலாக உள்ள ஒரப்படை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
சம்மரில் வீட்டில் இருக்கும் உங்கள் பிள்ளைகளுக்கு செய்து கொடுக்க ஈஸியான ஒரு ஸ்நாக்ஸ் அதுவும் தஞ்சாவூரில் மிகவும் ஸ்பெஷலாக உள்ள ஒரப்படை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
சம்மர் ஸ்பெஷலாக வீட்டில் இருக்கு பிள்ளைகளுக்கு என்ன மாதிரி ஒரு ஸ்நாக்ஸ் செய்து தருவது என்று தெரியவில்லையா? அபோ தஞ்சாவூர் ஸ்பெஷல் ஒரப்படை மொறுமொறுன்னு செய்து கொடுங்கள். இதை செய்வது பற்றி அபூர்வாஸ் நல்பாகம் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்
பச்சரிசி புழுங்கல் அரிசி கடலை பருப்பு துவரம் பருப்பு உளுந்து சோம்பு உப்பு பெருங்காயத்தூள் மஞ்சள்தூள் தேங்காய் சுரைக்காய் சின்ன வெங்காயம் கருவேப்பிலை கொத்தமல்லி காய்ந்த மிளகாய் எண்ணெய்
செய்முறை
Advertisment
Advertisements
ஒரு அளவு கப்பில் ஒரு கப் பச்சரிசி, ரேஷன் புழுங்கல் அரிசி, கடலைப்பருப்பு, கருப்பு உளுந்து, துவரம் பருப்பு ஆகியவற்றை ஒவ்வொரு கப் எடுத்துக் கொள்ளவும். பின்னர் இவற்றை நன்று கழுவி நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்னர் இவற்றை அரைப்பதற்காக ஒரு மிக்ஸியில் காய்ந்த மிளகாய், சோம்பு, உப்பு ஆகியவற்றை அரைத்துக் கொள்ளவும். அடுத்ததாக இதில் ஊற வைத்துள்ள பருப்பையும் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கப்பில் மாற்றி அதில் பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், தேங்காய், சுரைக்காய், சின்ன வெங்காயம், கருவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றையும் தேவையான அளவு சேர்த்து கலந்து விடவும்.
ஒரு கடாயில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி ஒரு கரண்டியில் இந்த மாவை எடுத்து வடை மாதிரி ஊற்றி தட்டிவிட்டு இரண்டு பக்கமும் திருப்பி போட்டு வேக விடலாம்.
எடுத்தால் சுவையான தஞ்சாவூர் பாரம்பரிய மொறு மொறு உரைப்படை ரெடியாகிவிடும் இதற்கு தேங்காய் சட்னி சுவையாக இருக்கும்.