தீபாவளி நெருங்கி வரும் நேரத்தில் பலரும் தங்கள் வீடுகளில் இனிப்பு வகைகள் செய்து தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வழங்குவார்கள். அந்த வகையில், சீரகசம்பா பச்சரிசியுடன், மைதா சேர்த்து தயாரிக்கப்படும் புதிய அதிரசத்தை செய்து பாருங்கள்.
இதற்கு தேவையான பொருள்கள்:
வெல்லம் 3 கிலோ,
சீரக சம்பா பச்சரிசி மாவு 3 கிலோ 600 கிராம்,
மைதா 100 கிராம்,
நெய் 100 மி.லீ,
ஏலக்காய் 10 - 20 கிராம்,
ஜாதிக்காய் பொடி ஒரு சிட்டிகை மற்றும்
எண்ணெய்
செய்முறை:
3 கிலோ வெல்லத்தை ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கரைக்க வேண்டும். வெல்லம் நன்றாக கரைந்ததும், அதிரச பாகு பதத்திற்கு வந்துள்ளதா என்பதை கண்டறிய, சிறிதளவு நீரில் விட வேண்டும். வெல்லப்பாகு நீரில் இருந்து திரண்டு வருவதை உறுதி செய்த பின்னர், பாகை வடிகட்ட வேண்டும். பின்னர், வடிகட்டிய பாகுடன், சீரக சம்பா பச்சரிசி மாவு, ஏலக்காய்தூள், ஜாதிக்காய் ஒரு சிட்டிகை, மைதா, நெய் ஆகியவை சேர்த்து கலக்க வேண்டும். மாவை நன்றாக கலக்கிய பின்னர், அது இறுகுவதற்காக ஒரு நாள் இரவு முழுவதும் அப்படியே வைத்து விட வேண்டும். அடுத்த நாள், மாவை எடுத்து அதிரசம் வடிவத்தில் தட்டி எண்ணெயில் போட்டு பொன் நிறத்திற்கு வரும் வரை மிதமான சூட்டில் விட வேண்டும். அதன்பின்னர் எண்ணெயில் இருந்து எடுத்தால் சுவையான அதிரசம் தயாராகிவிடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“