மைசூர் போண்டா என்றாலே அனைவருக்கும் பிடித்தமான ஒரு மாலை நேர சிற்றுண்டியாக இருக்கும். இந்த போண்டாவை, நாம் வீட்டிலேயே கோதுமை மாவு கொண்டு ஆரோக்கியமாகவும், அதே சமயம் சுவையாகவும் எப்படி செய்வது என்று இந்தக் குறிப்பில் காணலாம்.
தேவையான பொருட்கள்:
தயிர்,
உப்பு,
பேக்கிங் சோடா,
சீரகம்,
மைதா,
கோதுமை மாவு,
கறிவேப்பிலை,
கொத்தமல்லி,
இஞ்சி,
பச்சை மிளகாய் மற்றும்
எண்ணெய்.
செய்முறை:
ஒரு கப் தயிர், கால் டீஸ்பூன் உப்பு, கால் டீஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் கால் டீஸ்பூன் சீரகம் ஆகிய அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இதையடுத்து, ஒரு கப் மைதா மற்றும் ஒரு கப் கோதுமை மாவை இவற்றுடன் சேர்த்து பிசைய வேண்டும்.
இந்த மாவை சுமார் 10 நிமிடங்களுக்கு ஊற வைக்க வேண்டும். அதன் பின்னர், கறிவேப்பிலை, கொத்தமல்லி, துருவிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய் ஆகியவை சேர்த்து மீண்டும் பிசைய வேண்டும். இனி இதனை போண்டா வடிவத்திற்கு உருட்டி எடுத்துக் கொள்ளவும்.
இப்போது, அடுப்பில் கடாய் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் உற்றலாம். இதில் மாவை ஒவ்வொன்றாக போட்டு பொந்நிறமாக பொறித்து எடுத்தால், சுவையான மசூர் போண்டா தயாராகி விடும். இதன் சுவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும்.