மாலை நேரத்தில் ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு, ஒரு கப் அவல் இருந்தாலே போதும். அதை வைத்து சாஃப்டான போண்டாவை சிம்பிளாக செய்யலாம். அதன் ரெசிபியை இதில் காண்போம்.
தேவையான பொருட்கள்:
அவல்,
தயிர்,
தண்ணீர்,
மைதா மாவு,
உப்பு,
சீரகம்,
கொத்தமல்லி,
கறிவேப்பிலை,
இஞ்சி,
வெங்காயம்,
பேக்கிங் சோடா மற்றும்
எண்ணெய்.
செய்முறை:
ஒரு கப் அவலை சுமார் மூன்று முறை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். இத்துடன் முக்கால் கப் தயிர் சேர்த்து நன்கு கலந்து, மிக்ஸியில் பசை பதத்திற்கு அரைக்க வேண்டும். இத்துடன் ஒரு கப் தண்ணீர், அதே கப் அளவிற்கு மைதா மாவு மற்றும் அரை டீஸ்பூன் உப்பு சேர்த்து கலக்கவும்.
இதையடுத்து, மீண்டும் அரை கப் அளவிற்கு மைதா மாவு சேர்த்து கைகளால் அழுத்தி பிசைய வேண்டும். இந்த மாவு 10 நிமிடங்களுக்கு ஊறிய பின்னர், ஒரு ஸ்பூன் சீரகம், சிறிது கொத்தமல்லி, கறிவேப்பிலை, துருவிய இஞ்சி, பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து கலக்க வேண்டும்.
இறுதியாக, அரை ஸ்பூன் பேக்கிங் சோடா கலந்து, கொஞ்ச, கொஞ்சமாக உருட்டி எண்ணெய்யில் பொந்நிறமாக பொறித்து எடுத்தால், சுவையான அவல் போண்டா தயாராகி விடும். இது சாஃப்டாக இருப்பதால் எல்லோருக்கும் பிடிக்கும்.