சுவையான மாம்பழம் புளிசேரி எப்படி செய்யலாம் என்று இந்தப் பதிவில் பார்ப்போம். இனிப்பு, புளிப்பு மற்றும் காரம் என சுவைகளின் கலவையாக இருக்கும் இந்தக் குழம்பு, எல்லோரும் விரும்பும் வகையில் இருக்கும்.
தேவையான பொருட்கள்:
மாம்பழம்,
பச்சை மிளகாய்,
மஞ்சள் தூள்,
உப்பு,
மிளகாய் தூள்,
வெல்லம்,
தண்ணீர்,
தேங்காய்,
சீரகம்,
கடுகு,
வெந்தயம்,
வரமிளகாய்,
கறிவேப்பிலை.
செய்முறை:
நன்கு பழுத்த 4 மாம்பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றின் தோலை நீக்கி ஒரு பாத்திரத்தில் வைக்கலாம். இத்துடன் பச்சை மிளகாய், மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள், வெல்லம் மற்றும் சற்று தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து வேக வைக்க வேண்டும்.
இதனிடையே, தேங்காய், சீரகம், மஞ்சள் தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும். இந்த தேங்காய் மசாலாவை அடுப்பில் வேகை வைத்திருக்கும் மாம்பழத்துடன் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
இந்தக் குழம்பு நன்றாக கொதித்ததும் அடுப்பை அனைத்து விடலாம். இதன் பின்னர், தயிர் சேர்த்து கலக்கலாம். இப்போது, கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் சிறிது கடுகு, வெந்தயம், வரமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை தாளித்து குழம்புடன் சேர்த்தால் மாம்பழம் புளிசேரி தயாராக இருக்கும்.