எவ்வளவு சாப்பிட்டாலும் எடை அதிகரிக்காமல் இருக்கக் கூடிய உணவு வகைகள் இருக்கிறதா என்று சிந்திப்பவரா நீங்கள்? குறிப்பாக, இந்த உணவுகள் சுவையாகவும் இருக்க வேண்டும் என்று கருதியது உண்டா? அப்போது, இந்த ரெசிபி உங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
பச்சை பயிறு,
இஞ்சி,
பச்சை மிளகாய்,
கொத்தமல்லி இலைகள்,
வெங்காயம்,
கேரட்,
உப்பு,
சீரகப் பொடி,
கடலை மாவு,
எண்ணெய் மற்றும்
எள்.
செய்முறை:
ஒரு கப் அளவிற்கு முளைகட்டிய பச்சை பயிறு, நான்கு பூண்டு, சிறிய துண்டு இஞ்சி, மூன்று பச்சை மிளகாய் மற்றும் ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலைகள் ஆகியவற்றை மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக அரைத்து கொள்ள வேண்டும்.
இந்தக் கலவையுடன் சேர்த்து பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட், தேவையான அளவு உப்பு, அரை டீஸ்பூன் சீரகப் பொடி, இரண்டு டேபிள் ஸ்பூன் கடலை மாவு ஆகிய அனைத்தையும் சேர்த்து வடை வடிவத்தில் தட்டி எடுத்துக் கொள்ளலாம்.
இப்போது, அடுப்பில் கடாய் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து, கொஞ்சமாக எள் தூவ வேண்டும். இதில் நாம் தயாரித்து வைத்திருக்கும் மாவை சுட்டு எடுத்தால், சுவையான பச்சை பயிறு டோஸ்ட் தயாராகி விடும். இதனை எவ்வளவு சாப்பிட்டாலும் வெயிட் போடாது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.