ஒவ்வொரு நாளும் என்ன சமைக்கலாம் என்று சிந்திப்பதிலேயே பாதி நேரம் கடந்து விடும். அந்த வகையில் சிம்பிளாகவும், டேஸ்டியாகவும் இருக்கும் வகையில் பீட்ரூட் புலாவ் எவ்வாறு செய்யலாம் என்று இந்தக் குறிப்பில் காணலாம்.
தேவையான பொருட்கள்:
எண்ணெய்,
நெய்,
பட்டை,
ஏலக்காய்,
கிராம்பு,
பிரிஞ்சி இலை,
வெங்காயம்,
பச்சை மிளகாய்,
இஞ்சி - பூண்டு விழுது,
கொத்தமல்லி,
தக்காளி,
மஞ்சள் தூள்,
உப்பு,
மிளகாய் தூள்,
பீட்ரூட்
தேவையான பொருட்கள்:
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம். இனி நெய், பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரிஞ்சி இலை, பொடியாக நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இத்துடன் இரண்டு பச்சை மிளகாய்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.
வெங்காயத்தின் நிறம் பொந்நிறமாக மாறியதும் அதில் இஞ்சி - பூண்டு விழுது, கொத்தமல்லி இலைகள் சேர்த்து மீண்டும் வதக்க வேண்டும். இதன் பின்னர், ஒரு தக்காளியை சிறிதாக நறுக்கி இதில் சேர்த்து கலக்கலாம். இதன் பின்னர், ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள் சேர்க்க வேண்டும்.
இதையடுத்து, ஒரு பீட்ரூட்டை நன்றாக துருவி இதில் சேர்த்து வதக்கலாம். இத்துடன் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இறுதியாக, கழுவி வைத்திருக்க அரிசியை இந்தக் கலவையுடன் சேர்த்துக் கொள்ளலாம். அதன் பின்னர், குக்கரில் வேக வைத்து எடுத்தால் சுவையான பீட்ரூட் புலாவ் தயாராகி விடும்.