டேஸ்டியான மற்றும் ஹெல்தியான மதிய உணவுக்கு ஏற்ற முட்டைகோஸ் சாதம் மற்றும் வாழைக்காய் வடையை எப்படி சிம்பிளாக செய்யலாம் என்று இந்தப் பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
எண்ணெய்,
கடுகு,
உளுந்து,
கடலை பருப்பு,
முந்திரி,
கறிவேப்பிலை,
பச்சை மிளகாய்,
மஞ்சள் தூள்,
வெங்காயம்,
பட்டாணி,
முட்டைகோஸ்,
உப்பு,
கொத்தமல்லி,
எலுமிச்சை சாறு,
வாழைக்காய்,
அரிசி மாவு,
இஞ்சி,
சோம்பு,
சீரகத்தூள்,
கரம் மசாலா மற்றும்
மிளகாய் தூள்.
செய்முறை:
அடுப்பில் கடாய் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றலாம். இனி, ஒரு ஸ்பூன் கடுகு, உளுந்து, கடலை பருப்பு, முந்திரி ஆகியவற்றை சேர்த்து வறுக்க வேண்டும். இவை அனைத்தும் பொந்நிறமாக மாறியதும் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், மஞ்சள் தூள் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
இதையடுத்து, கால் கப் பட்டாணி, துருவிய முட்டைகோஸ் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு வதக்க வேண்டும். இதன் பின்னர், வடித்து ஆறவைத்த சாதத்தை, இந்த மசாலா கலவையுடன் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
இறுதியாக, சிறிது கொத்தமல்லி மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்தால் சுவையான முட்டைகோஸ் சாதம் தயாராகி விடும். இதனிடையே, வேகவைத்த வாழைக்காயை நன்றாக துருவி எடுத்துக் கொள்ளலாம்.
இத்துடன், பொடியாக நறுக்கிய வெங்காயம், அரிசி மாவு, இஞ்சி, சோம்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, மஞ்சள் தூள், சீரகத்தூள், கரம் மசாலா, மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலக்க வேண்டும். இவற்றை வடை வடிவத்தில் தட்டி எடுத்து, பொந்நிறமாக பொறித்தால் வாழைக்காய் வடையும் ரெடியாக இருக்கும்.