கேரட்டில் அதிக சத்து உள்ளது. கேரட்டை தண்ணீரில் கழுவி அப்படியே கூட சாப்பிடலாம். கேரட் கொண்டு பல ரெசிபிகள் செய்யலாம். கேரட்டில் புரதச்சத்து, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கொழுப்புச்சத்து ஆகியவற்றுடன் வைட்டமின் ஏ, வைட்டமின் கே1, வைட்டமின் பி6, பயோடீன், பொட்டாசியம் ஆகிய வைட்டமின்களும் மினரல்களும் உள்ளன. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அந்த வகையில் சுவையானதாகவும், ஆரோக்கியமானதாகவும் உள்ள கேரட் பாயாசம் எப்படி செய்வது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கேரட் – 250 கிராம்
வெல்லம் – 1/4 கப்
தண்ணீர் – தேவையான அளவு
தேங்காய் பால் – 1 கப்
ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்
நெய் – 2 டீஸ்பூன்
முந்திரி, திராட்சை – தேவையான அளவு
செய்முறை
கேரட்டை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும். கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து வைக்கவும். பின் அடுப்பில் மீண்டும் கடாய் வைத்து வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும். அதில் கேரட் விழுது சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் தேங்காய் பால், ஏலக்காய் தூள் சேர்த்து கலக்கவும். பின், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கலந்து இறக்கவும். அவ்வளவு தான் சுவையான கேரட் பாயாசம் ரெடி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil