ஒவ்வொரு நாளும் மதிய சாப்பாட்டிற்கு என்ன சமைக்கலாம் என்று சிந்திப்பதிலேயே பாதி நேரம் போய் விடும். குறிப்பாக, தினமும் விதவிதமாக சமைக்க வேண்டும் என்று நிறைய பேர் யோசிப்பார்கள். அந்த வகையில், சுவையான புதினா தக்காளி சாதத்தை எப்படி ஈசியாக செய்யலாம் என்று இந்தப் பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்:
புதினா,
இஞ்சி - பூண்டு விழுது,
தக்காளி,
எண்ணெய்,
பட்டை,
கிராம்பு,
வெங்காயம்,
பச்சை மிளகாய்,
மஞ்சள் தூள்,
மிளகாய் தூள்,
உப்பு,
பாஸ்மதி சாதம் மற்றும்
கொத்தமல்லி இலைகள்.
செய்முறை:
ஒரு கைப்பிடி அளவிற்கு புதினா, ஒரு ஸ்பூன் இஞ்சி - பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய தக்காளி இரண்டு ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து பசை பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது, அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றவும்.
இதில், பட்டை, கிராம்பு, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்த பின்னர், அரைத்து வைத்த மசாலாவை இதில் சேர்த்து கலக்க வேண்டும்.
இந்தக் கலவையுடன் தேவையாள அளவு மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கிளறவும். இதில் இருந்து எண்ணெய் பிரிந்து வந்ததும், வடித்து வைத்த பாஸ்மதி சாதத்தை சேர்த்து கலக்க வேண்டும்.
சாதத்துடன் மசாலா நன்றாக ஊறும் வரை இவற்றை கலக்குவது அவசியம். அதன் பின்னர், இறுதியாக கொத்தமல்லி இலைகள் தூவி எடுத்தால் சுவையான புதினா தக்காளி சாதம் தயாராகி விடும். இதன் சுவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் வகையில் இருக்கும்.