சிறிது நேரம் வேலை பார்த்தாலே பலருக்கு உடல் சோர்வு வருகிறது. ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக பலரும் இது போன்ற பிரச்சனைகளால் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதனை போக்கும் விதமாக நமது உடலை உறுதியாக மாற்றும் ராகி சிமிலி உருண்டை எப்படி செய்யலாம் என்று இதில் காண்போம்.
தேவையான பொருட்கள்:
ராகி மாவு,
உப்பு,
தண்ணீர்,
எண்ணெய்,
வேர்க்கடலை,
வெள்ளை எள் மற்றும்
ஏலக்காய்
செய்முறை:
அடுப்பில் கடாய் வைத்து அதில் அரை கிலோ ராகி மாவை மிதமான சூட்டில் வாசனை வரும் வரை வறுக்க வேண்டும். அதன் பின்னர், வறுத்த மாவுடன் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பிசைய வேண்டும்.
இது சப்பாத்தி மாவு பதத்திற்கு வந்ததும், வாழை இலையில் எண்ணெய் தடவி, இந்த மாவை தட்டிக் கொள்ளவும். அதன் பின்னர், தோசைக் கல்லில் இதனை சுட்டு எடுக்கலாம். இந்த ரொட்டி வெந்த பின்னர், சிறிய துண்டுகளா வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது, அடுப்பில் இருக்கும் கடாயில் வேர்க்கடலை, வெள்ளை எள், சிறிது ஏலக்காய் சேர்த்து வறுக்கவும். இத்துடன் முக்கல் கிலோ வெல்லம் சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்க வேண்டும்.
இதையடுத்து, கைகளில் சிறிது நல்லெண்ணெய் தடவி, இந்த மாவை குட்டி குட்டி உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்தால் சுவையான ராகி சிமிலி உருண்டை தயாராகி விடும்.
இதில், கால்சியம், புரதம் போன்ற அத்தியாவசிய சத்துகள் இருப்பதால், நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.