சர்க்கரை வள்ளி கிழங்கில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், இது சுகர் நோயாளிகளுக்கு அருமருந்தாக கருதப்படுகிறது. அந்த வகையில், இந்தக் கிழங்கை கொண்டு சுவையான வறுவல் எப்படி செய்யலாம் என்று இந்த சமையல் குறிப்பில் காணலாம்.
தேவையான பொருட்கள்:
சர்க்கரை வள்ளிக் கிழங்கு,
எண்ணெய்,
மிளகாய் தூள்,
சீரக தூள்,
கரம் மசாலா தூள்,
சாட் மசாலா,
உப்பு,
அரிசி மாவு மற்றும்
ரவை.
செய்முறை:
சர்க்கரை வள்ளிக் கிழங்கை நன்றாக கழுவி விட்டு, வட்ட வடிவத்தில் சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் சிறிது எண்ணெய் தெளித்து ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், கால் டீஸ்பூன் சீரக தூள், சிறிது கரம் மசாலா தூள், சாட் மசாலா, தேவையான அளவு உப்பு, ஒரு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு மற்றும் ரவை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்றாக கலந்த பின்னர், அடுப்பில் கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தலாம். இனி, ஊற வைத்த சர்க்கரை வள்ளிக் கிழங்கை பொந்நிறமாக பொறித்து எடுத்தால், சுவையான வறுவல் தயாராகி விடும்.
இதை குழந்தைகளுக்கு லஞ்ச் சைட்டிஷ்-ஆக கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இது உடலுக்கும் ஆரோக்கியத்தை அளிக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.