புரதம், நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்பு, கார்ப்ஸ் என அனைத்தும் சரி விகிதத்தில் இருக்கக் கூடிய உணவுகளை அன்றாடம் சாப்பிட வேண்டும் என்று வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். அதனடிப்படையில், இவை அனைத்தும் அடங்கிய சுவையான ஒரு லஞ்ச் ரெசிபியை எப்படி ஈசியாக செய்யலாம் என்று இந்த சமையல் குறிப்பில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி,
மிளகு,
பட்டை,
லவங்கம்,
பூண்டு,
இஞ்சி,
பச்சை மிளகாய்,
கொத்தமல்லி இலை,
கடலை எண்ணெய்,
சீரகம்,
பிரியாணி இலைகள்,
வெங்காயம்,
பட்டாணி மற்றும்
சோளம்,
செய்முறை:
ஒரு கிளாஸ் பாஸ்மதி அரிசியை நன்கு கழுவிய பின்னர், இரண்டு கிளாஸ் சுடுதண்ணீரில் ஊறவைக்க வேண்டும். இதன் பின்னர், மிளகு, பட்டை, லவங்கம் ஆகியவற்றை பொடியாக எடுத்துக் கொள்ளவும். இத்துடன் ஆறு பூண்டு மற்றும் நன்கு துண்டு இஞ்சி சேர்த்து இடித்துக் கொள்ள வேண்டும்.
இவற்றுடன் இரண்டு பச்சை மிளகாய், சிறிது கொத்தமல்லி இலைகளையும் சேர்த்து துவையல் பதத்தில் அரைத்து கொள்ளலாம். இப்போது, அடுப்பில் குக்கர் வைத்து அதில் கொஞ்சமாக கடலை எண்ணெய் ஊற்றவும். இதில் சீரகம், பிரியாணி இலைகள் மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
இதில் வெங்காயம் பொந்நிறமாக மாறியதும், அரைத்து வைத்த மசாலா, ஒரு கப் பட்டாணி, சோளம் மற்றும் ஊறவைத்த அரிசி சேர்த்து குக்கரை மூடி விடலாம். இதனை இரண்டு விசிலுக்கு வேக வைத்து எடுத்தால் சுவையான பட்டாணி ரைஸ் தயாராகி விடும். இதன் சுவை குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான வகையில் இருக்கும்.