மதியம் சமைத்த சாதம் மீதமாகி விட்டதா? கவலையே வேண்டாம், அந்த மீதமான சாதத்தை வைத்து சுவையான காலிஃபிளவர் ஃப்ரைட் ரைஸ் எப்படி செய்யலாம் என்று இந்த சமையல் குறிப்பில் காண்போம்.
தேவையான பொருட்கள்:
எண்ணெய்,
கடுகு,
கறிவேப்பிலை,
காய்ந்த மிளகாய்,
பூண்டு,
வெங்காயம்,
மிளகாய் தூள்,
மல்லி பொடி,
சீரகப் பொடி,
கரம் மசாலா,
மிளகு,
உப்பு,
வேகவைத்த காலிஃபிளவர் மற்றும்
முட்டை.
செய்முறை:
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளலாம். இத்துடன் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் ஆகியவை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும்.
இதில் இருந்து வாசனை வரும் போது மூன்று பூண்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கலாம். வெங்காயம் பொந்நிறமாக மாறியதும் காரத்திற்காக ஒரு டீஸ்பூன் மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மிளகு மற்றும் கரம் மசாலா சேர்க்கலாம்.
இவை அனைத்தையும் நன்றாக கலந்த பின்னர், வேக வைத்த காலிஃபிளவரையும் இதில் சேர்க்கவும். அதன் பின்னர், முட்டையை ஊற்றி ஃப்ரை செய்ய வேண்டும். இந்த முட்டை வெந்த பின்னர், ஒரு கப் சாதத்தை இவற்றுடன் சேர்க்கலாம்.
இத்துடன் தேவையான அளவு உப்பு மற்றும் கொத்தமல்லி இலைகள் தூவி எடுத்தால் சுவையான காலிஃபிளவர் ஃப்ரைட் ரைஸ் ரெடியாகி விடும்.