உங்களுடைய லஞ்ச் பாக்ஸ் ரெசிபியில் இந்த சேமியா பிரியாணியை தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம். ஏனெனில், இதனை செய்வதற்கு அவ்வளவு எளிதாக இருக்கும். மேலும், சுவையும் அட்டகாசமாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
சேமியா,
எண்ணெய்,
நெய்,
பட்டை,
கிராம்பு,
ஏலக்காய்,
பிரிஞ்சி இலை,
வெங்காயம்,
பச்சை மிளகாய்,
இஞ்சி - பூண்டு விழுது,
தக்காளி,
மஞ்சள் தூள்,
உப்பு,
புதினா,
மிளகாய் தூள்,
கேரட்,
பீன்ஸ்,
பட்டாணி மற்றும்
கொத்தமல்லி இலைகள்.
செய்முறை:
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய், நெய், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். இதில் வெங்காயம் பொந்நிறமாக மாறியதும், பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து கலக்கலாம்.
இதன் பச்சை வாசனை நீங்கியதும் சிறியதாக நறுக்கிய தக்காளி, அரை டீஸ்பூன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, புதினா, ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் சேர்க்கலாம். இதையடுத்து, கேரட், பீன்ஸ், பட்டாணி ஆகியவை சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.
இதில் கால் கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து மூடி வைக்க வேண்டும். இப்போது, ஒரு கப் சேமியா மற்றும் தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்க்கலாம். இறுதியாக, சிறிது எலுமிச்சை சாறு, கொத்தமல்லி இலைகள் தூவி மூடி விட வேண்டும். இதனை 5 நிமிடங்கள் கழித்து பார்த்தால் சுவையான சேமியா பிரியாணி தயாராகி இருக்கும்.