தற்போதைய விலைவாசியில் பெரும்பாலானவர்களால் சிக்கன், மட்டன் கொண்டு அடிக்கடி பிரியாணி சமைக்க முடியாது. அந்த மாதிரியான சூழலில் சோயா வைத்து எப்படி பிரியாணி செய்யலாம் என்று இப்போது காணலாம்.
தேவையான பொருட்கள்:
நெய்,
எண்ணெய்,
பட்டை,
ஏலக்காய்,
அன்னாசிப்பூ,
கிராம்பு,
வெங்காயம்,
உப்பு,
பச்சை மிளகாய்,
காஷ்மீரி சில்லி பௌடர்,
இஞ்சி - பூண்டு விழுது,
தக்காளி,
கொத்தமல்லி இலைகள்,
தயிர்,
சோயா,
பிரியாணி மசாலா.
செய்முறை:
அடுப்பில் கடாய் வைத்து அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் நெய், ஐந்து டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். இத்துடன் பட்டை, ஏலக்காய், அன்னாசிப்பூ, கிராம்பு சேர்த்துக் கொள்ளலாம். மேலும், பொடியாக நறுக்கிய மூன்று பெரிய வெங்காயத்தை இதில் சேர்த்து வதக்க வேண்டும்.
இதையடுத்து, இரண்டு டேபிள் ஸ்பூன் கல் உப்பு, பிரியாணி இலை, ஐந்து பச்சை மிளகாய் சேர்த்து வதக்கலாம். வெங்காயம் பொந்நிறமாக மாறியதும் ஒன்றரை ஸ்பூன் காஷ்மீரி சில்லி பௌடர், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து கலக்கலாம்.
இவற்றின் பச்சை வாசனை நீங்கியதும் தக்காளி, கொத்தமல்லி இலைகள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும். இதற்கடுத்து இரண்டு ஸ்பூன் கெட்டி தயிர், சுடுதண்ணீரில் ஊற வைத்த சோயா சேர்த்து மீண்டும் ஒரு நிமிடம் கலக்க வேண்டும்.
இதையடுத்து தேவையான அளவு தண்ணீர், பிரியாணி மசாலா, அரிசி சேர்க்கலாம். இதற்கு சுமார் 20 நிமிடங்கள் தம் போட்டு எடுத்தால் சுவையான சோயா பிரியாணி ரெடியாகி விடும்.