பருப்பை ஊற வைக்காமல், அரைக்காமல் எவ்வாறு சுவையான உளுந்த வடை செய்யலாம் என்று இந்த சமையல் குறிப்பில் பார்க்கலாம். குறிப்பாக, இந்த வடை அதிகம் எண்ணெய் குடிக்காது என்பதால் ஆரோக்கியத்திற்கு பாதிப்பு கிடையாது.
தேவையான பொருட்கள்:
இட்லி மாவு,
மைதா,
அரிசி மாவு,
வெங்காயம்,
பச்சை மிளகாய்,
கறிவேப்பிலை,
சீரகம்,
உப்பு,
பேக்கிங் சோடா மற்றும்
எண்ணெய்
செய்முறை:
இரண்டு கப் அளவிற்கு இட்லி மாவை எடுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் ஒரு ஸ்பூன் மைதா, அரிசி மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சீரகம், உப்பு மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
இந்த மாவு நன்றாக கெட்டியானதும் உளுந்து வடை வடிவத்திற்கு தட்டி எடுத்துக் கொள்ளவும். அதன் பின்னர், அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றிக் கொள்ளலாம். இந்த எண்ணெய் சூடான பின்னர், தட்டி வைத்திருக்கும் மாவை பொறித்து எடுத்தால் சுவையான வடை ரெடியாகி விடும்.
குறிப்பாக, பருப்பு ஊறை வைத்து, அதனை அரைத்து செய்ய வேண்டிய அவசியம் இல்லாத காரணத்தினால், இந்த டேஸ்டியான வடையை 10 நிமிடங்களில் செய்திட முடியும்.