அரிசி மாவுடன் இந்த கிழங்கு சேருங்க… சாஃப்ட்டான இடியாப்பம் ரெடி!
சாஃப்டான இடியாப்பத்தை எவ்வாறு சுலபமாக செய்யலாம் என்று இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இதற்காக அரிசி மாவுடன் சேர்த்து சக்கரைவள்ளி கிழங்கையும் பயன்படுத்த வேண்டும்.
சாஃப்டான இடியாப்பத்தை எவ்வாறு சுலபமாக செய்யலாம் என்று இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இதற்காக அரிசி மாவுடன் சேர்த்து சக்கரைவள்ளி கிழங்கையும் பயன்படுத்த வேண்டும்.
எளிதாக செரிமானம் ஆகக் கூடிய உணவுகளில் இடியாப்பத்திற்கு பிரதான இடம் இருக்கிறது. இதனை காலை உணவாக எடுத்துக் கொள்வதற்கு நிறைய பேர் விரும்புகின்றனர். அதன்படி, சுவையான, சாஃப்டான இடியாப்பம் எப்படி தயாரிக்கலாம் என்று தற்போது காணலாம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
சக்கரைவள்ளி கிழங்கு, அரிசி மாவு, உப்பு மற்றும் தண்ணீர்
செய்முறை:
Advertisment
Advertisements
அரை கிலோ சக்கரைவள்ளி கிழங்கை நன்றாக கழுவி வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர், கிழங்கின் தோலை நீக்கி சிறிய துண்டுகளாக வெட்டி ஆற வைக்க வேண்டும். இவை ஆறியதும் மிக்ஸியில் போட்டு, இரண்டு டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து பசை பதத்திற்கு அரைக்க வேண்டும்.
இதையடுத்து, ஒரு கப் அரிசி மாவுடன், தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்க வேண்டும். பின்னர், சூடாக இருக்கும் தண்ணீரை இந்த மாவுடன் கலக்க வேண்டும். இதன் பின்னர், சக்கரைவள்ளி கிழங்கு மாவையும் இத்துடன் சேர்த்து கலக்க வேண்டும்.
இப்படி செய்தால் நமக்கு தேவையான சாஃப்டான இடியாப்ப மாவு தயாராகி விடும். இதனை வேக வைத்து எடுத்தால் சுவையான இடியாப்பம் ரெடியாகி விடும். இதை தேங்காய் பால் அல்லது நாட்டுச் சக்கரையுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.