மாலை நேரங்களில் சூடான, மொறுமொறுப்பான ஸ்நாக்ஸ் சாப்பிட யாருக்குத்தான் பிடிக்காது? வழக்கமான பஜ்ஜிகளைத் தாண்டி, சத்தான மற்றும் சுவையான முட்டைக்கோஸ் பஜ்ஜி செய்து கொடுத்தால் வீட்டில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்பி சாப்பிடுவார்கள். முட்டைக்கோஸ் பஜ்ஜி செய்வது மிகவும் எளிது. வீட்டில் முட்டைக்கோஸ் இருந்தால் போதும், சட்டென்று சுடச்சுட பஜ்ஜி போட்டு அசத்தலாம்.
தேவையான பொருட்கள்
முட்டைக்கோஸ்: 16
நறுக்கிய வெங்காயம்: 1
அரிசி மாவு: 2 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு: 1 கப்
பொட்டுக்கடலை மாவு: 3 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள்: 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள்: ஒரு சிட்டிகை
உப்பு: தேவையான அளவு
எண்ணெய்: தேவையான அளவு
செய்முறை
முதலில், பொடியாக நறுக்கிய வெங்காயம், உப்பு, கடலை மாவு, அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு, மிளகாய் தூள், பெருங்காயத்தூள் ஆகிய அனைத்தையும் ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்க்கவும். இப்போது, சிறிது சிறிதாக நீர் சேர்த்து, மாவை பஜ்ஜி மாவு பதத்திற்கு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். மாவு மிகவும் நீர்த்துப் போகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
முட்டைக்கோஸ் இலைகளை நன்கு கழுவி, நீளவாக்கில் (பஜ்ஜி போடுவதற்கு ஏற்றவாறு) நறுக்கித் தயாராக வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் காய்ந்ததும், நறுக்கிய முட்டைக்கோஸ் இலைகளை ஒவ்வொன்றாக பிசைந்து வைத்துள்ள மாவில் நன்றாகத் தோய்க்க வேண்டும்.
மாவில் தோய்த்த முட்டைக்கோஸ் இலைகளை காய்ந்த எண்ணெய்யில் போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். இவ்வாறு செய்தால் சூடான, மொறுமொறுப்பான, சூப்பர் சுவையில் முட்டைக்கோஸ் பஜ்ஜி தயாராகி விடும்.