பெரும்பாலான கடைகளில் சிக்கன் 65 செய்யும் போது அதன் நிறத்தை சிவப்பாக மாற்ற ஃபுட் கலர்களை பயன்படுத்துவார்கள். இவை உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை. அந்த வகையில், இயற்கையான முறையில் பச்சை நிறத்திலேயே மொறுமொறுப்பான சிக்கன் 65 எவ்வாறு செய்யலாம் என்று இந்த சமையல் குறிப்பில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சிக்கன்,
மஞ்சள் தூள்,
உப்பு,
தயிர்,
மிளகு,
சீரகம்,
பச்சை மிளகாய்,
புதினா,
கொத்தமல்லி,
கரம் மசாலா,
அரிசி மாவு,
கறிவேப்பிலை,
எலுமிச்சை சாறு,
இஞ்சி பூண்டு விழுது,
பொட்டுக்கடலை,
பூண்டு மற்றும்
எண்ணெய்
செய்முறை:
முதலில் சிக்கனை நன்றாக கழுவி விட்டு அதன் பின்னர் மஞ்சள் தூள், உப்பு, இரண்டு ஸ்பூன் தயிர் ஆகியவை கலந்து ஊற வைக்க வேண்டும். இதன் பின்னர், மிளகு, சீரகம், தனியா, பச்சை மிளகாய், புதினா மற்றும் கொத்தமல்லி ஆகிய அனைத்தையும் சேர்த்து அரைக்க வேண்டும்.
இதையடுத்து, அரைத்த மசாலாவை சிக்கனுடன் சேர்த்து சிறிதளவு கரம் மசாலா, அரிசி மாவு, கார்ன்ஃபிளவர் மாவு, கறிவேப்பிலை, எலுமிச்சை சாறு, இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை கலந்து 30 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
இதனிடையே, ஒரு கைப்பிடி அளவிற்கு கறிவேப்பிலையை கடாயில் போட்டு வறுக்க வேண்டும். இத்துடன் காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம், தனியா சேர்த்துக் கொள்ளலாம். இதன் பின்னர், அடுப்பை ஆஃப் செய்து விட்டு இவை ஆறிய பின்னர், பொட்டுக்கடலை, உப்பு மற்றும் தோல் உரிக்காத பூண்டு சேர்த்து அரைக்க வேண்டும்.
அடுப்பில் கடாய் வைத்து அதில் எண்ணெய் சூடானதும், ஊற வைத்த சிக்கனை அதில் போட்டு பொறிக்க வேண்டும். சிக்கன் பொறிந்ததும், இறுதியாக அரைத்து வைத்த மசாலா பொடியை இதில் தூவி பரிமாறலாம்.