டிபனுக்கு எத்தனையோ விதமான சைட் டிஷ் சாப்பிட்டு இருப்போம். அந்த வகையில் ஒரு புதுமையான சிக்கன் சைட் டிஷ்ஷை இந்த சமையல் குறிப்பில் பார்க்கலாம். குறிப்பாக, இதனை செய்வதற்கு மிகவும் எளிமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம்,
இஞ்சி,
பூண்டு,
பச்சை மிளகாய்,
பொட்டுக் கடலை,
முந்திரி பருப்பு,
கசகசா,
மிளகு,
சீரகம்,
பட்டை,
கிராம்பு,
ஏலக்காய்,
தேங்காய்,
சோம்பு,
பெரிய வெங்காயம்,
சிக்கன்,
உப்பு,
கறிவேப்பிலை மற்றும்
கொத்தமல்லி
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், பொட்டுக் கடலை, முந்திரி பருப்பு, கசகசா, மிளகு, சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் அரை கப் அளவிற்கு தேங்காய் ஆகிய அனைத்தையும் மிக்ஸியில் அரைக்க வேண்டும்.
இப்போது, அடுப்பில் ஒரு குக்கர் வைத்து அதில் சோம்பு, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். இத்துடன் ஒரு கைப்பிடி அளவிற்கு புதினா சேர்த்துக் கொள்ளலாம். இதன் பின்னர், அரை கிலோ சிக்கனை இத்துடன் சேர்த்து மீண்டும் வதக்க வேண்டும். இவற்றுடன் ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு சேர்க்க வேண்டும்.
இனி, ஏற்கனவே அரைத்து வைத்திருந்த மசாலாவை சிக்கனுடன் சேர்த்து, இரண்டு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கிளற வேண்டும். இதில் சிறிதளவு கறிவேப்பிலை போட்டு இரண்டு விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும். இறுதியாக சிறிது கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான சிக்கன் வெள்ளை சால்னா தயாராகி விடும்.