சப்பாத்தி மற்றும் பூரிக்கு ஏற்ற வகையில் சுவையான கொண்டை கடலை குருமா எப்படி டேஸ்டியாக செய்யலாம் என்று பார்க்கலாம். இது சுவையாக இருப்பது மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையிலும் இருக்கும்.
தேவையான பொருட்கள்:
எண்ணெய்,
சோம்பு,
ஏலக்காய்,
அன்னாசிப்பூ,
கிராம்பு,
பட்டை,
வெங்காயம்,
மிளகாய்,
கறிவேப்பிலை,
புதினா,
கொண்டை கடலை,
பூண்டு,
இஞ்சி,
தக்காளி,
கசகசா,
முந்திரி பருப்பு,
பொட்டுக் கடலை,
உப்பு மற்றும்
கொத்தமல்லி இலைகள்.
செய்முறை:
அடுப்பில் குக்கர் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றவும். இதில், ஒரு டேபிள் ஸ்பூன் சோம்பு, இரண்டு ஏலக்காய், அன்னாசிப்பூ, கிராம்பு, சிறிய துண்டு பட்டை ஆகியவற்றை சேர்த்து வறுக்க வேண்டும்.
இதற்கடுத்து, சிறிதாக நறுக்கிய பெரிய வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை மற்றும் புதினா சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயத்தின் நிறம் மாறியதும், இரவு ஊறவைத்து கொண்டை கடலையை இதில் சேர்க்கலாம்.
இனி, பூண்டு, சிறிய துண்டு இஞ்சி, தக்காளி, தேங்காய், கசகசா, முந்திரி பருப்பு, ஒரு ஸ்பூன் பொட்டுக் கடலையை பசை பதத்திற்கு அரைக்கவும். இந்த மசாலாவை குக்கரில் இருக்கும் பொருட்களுடன் சேர்த்து கலக்க வேண்டும்.
இதில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து கலக்கலாம். இதையடுத்து, குக்கரை மூடி மூன்று விசில் வரும் வரை வேகவைக்க வேண்டும். இறுதியாக கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான கொண்டை கடலை குருமா தயாராக இருக்கும்.