குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஸ்வீட்… வெள்ளரிக்காய் வைத்து இப்படி செய்து கொடுங்க!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வெள்ளரிக்காய் ஸ்வீட் எப்படி செய்யலாம் என்று இந்த சமையல் குறிப்பில் காணலாம். இதன் செய்முறை மிக எளிதாக இருக்கும்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வெள்ளரிக்காய் ஸ்வீட் எப்படி செய்யலாம் என்று இந்த சமையல் குறிப்பில் காணலாம். இதன் செய்முறை மிக எளிதாக இருக்கும்.

author-image
WebDesk
New Update
Cucumber sweet

சத்தான வெள்ளரிக்காய் கொண்டு சுவையான ஸ்வீட் எப்படி செய்யலாம் என்று இந்தப் பதிவில் பார்க்கலாம். இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Advertisment

தேவையான பொருட்கள்:

வெள்ளரிக்காய்,
வெல்லம்,
தேங்காய்,
நெய்,
ஏலக்காய் தூள்,
தண்ணீர் மற்றும்
பச்சரிசி மாவு

செய்முறை:

Advertisment
Advertisements

ஒரு பெரிய வெள்ளரிக்காயை எடுத்து அதன் தோலை சீவி, அதன் உள்ளே இருக்கும் விதைகளை நீக்க வேண்டும். அதன் பின்னர், வெள்ளரிக்காயை துருவி எடுத்துக் கொள்ளலாம். துருவிய வெள்ளரிக்காயை ஒரு கடாயில் மாற்றி அத்துடன் ஒரு கப் பொடித்த வெல்லம், ஒரு கப் துருவிய தேங்காய், ஒரு டேபிள் ஸ்பூன் நெய், அரை டேபிள் ஸ்பூன் ஏலக்காய் தூள் மற்றும் அரை கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

இந்தக் கலவை ஒரு கொதி வந்ததும், ஒரு கப் பச்சரிசி மாவு சேர்த்து மீண்டும் கலக்க வேண்டும். மாவு முற்றிலும் கெட்டியாக வரும் வரை இதனை கிளற வேண்டும். அதன் பின்னர், இதனை அடுப்பில் இருந்து இறக்கி விடலாம். இந்த மாவு ஆறியதும் கையில் சிறிது எண்ணெய் தடவி விட்டு, சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைய வேண்டும்.

அதன் பின்னர், இந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி எடுக்க வேண்டும். இப்போது, சிறிய வாழை இலையில் லேசாக நெய் தடவி, மாவு உருண்டைகளை மெலிதாக தட்ட வேண்டும். இதையடுத்து, வாழை இலையை மாவுடன் சேர்த்து மடிக்க வேண்டும்.

இவற்றை வாழை இலையுடன் சேர்த்து இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடங்களுக்கு வேக வைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் சுவையான வெள்ளரிக்காய் ஸ்வீட் தயாராகி விடும். இதன் சூடு ஆறியதும் சாப்பிடலாம்.

நன்றி - Indian Recipes Tamil Youtube Channel

Cucumber and its health benefits

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: