Advertisment

கறிவேப்பிலை சாதம் இப்படி செய்யுங்க… டிபன் பாக்ஸ் காலியாகி வரும்!

சுவையான கறிவேப்பிலை சாதம் செய்வது எப்படி என இப்பதிவில் பார்க்கலாம். இது எளிமையாகவும், விரைவாகவும் செய்யக்கூடியது என்பதால் நேரமும் மிச்சமாகும்.

author-image
WebDesk
New Update
Curry leaves rice

கறிவேப்பிலை சாதம் எவ்வாறு சுவையாக செய்ய வேண்டும் என இதில் காணலாம். மிகக் குறைந்த நேரத்திலேயே செய்யக் கூடிய இந்த ரெசிபி, அனைவருக்கும் பிடித்தமான சுவையில் இருக்கும்.

Advertisment

தேவையான பொருள்கள்:

ஒரு கை கறிவேப்பிலை, 
ஒரு கை கொத்தமல்லி, 
3 பச்சை மிளகாய்,
3 டேபிள் ஸ்பூன் தேங்காய், 
சிறிய துண்டு இஞ்சி,
எண்ணெய்,
ஒரு டேபிள் ஸ்பூன் கடுகு, உளுத்தம் பருப்பு,
ஒரு டீஸ்பூன் கடலை,
2 டேபிள் ஸ்பூன் வேர்க்கடலை,
சிறிது முந்திரி,
சிறிது வரமிளகாய்,
மஞ்சள் தூள், 
உப்பு,
2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு

செய்முறை: 

ஒரு கப் அளவிற்கு வடித்த சாதத்தை நன்றாக ஆற வைக்க வேண்டும். ஒரு கை கொத்தமல்லி, ஒரு கை கறிவேப்பிலை, 3 பச்சை மிளகாய், 3 டேபிள் ஸ்பூன் தேங்காய், சிறிய துண்டு இஞ்சி ஆகியவற்றை பரபரப்பாக அரைத்து எடுக்க வேண்டும். அதன்பின்னர் பாத்திரத்தில், எண்ணெய் ஊற்றி அத்துடன் ஒரு டேபிள் ஸ்பூன் கடுகு, உளுத்தம் பருப்பு, ஒரு டீஸ்பூன் கடலை, 2 டேபிள் ஸ்பூன் வேர்க்கடலை, சிறிது முந்திரி, சிறிது வரமிளகாய் ஆகியவை சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் இத்துடன் சாதம் மற்றும் முதலில் அரைத்த கலவையையும் சேர்த்து வதக்க வேண்டும். மேலும், தேவைக்கேற்ப மஞ்சள் தூள், உப்பு சேர்க்க வேண்டும். இறுதியாக 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து எடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் கறிவேப்பிலை சாதம் தயாராகிவிடும்.

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Benefits Of Curry Leaves
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment