பிரியாணி என்றால் பலருக்கும் பிடிக்கும். ஆனால், பிரியாணியை விட சுவையான உணவு என்ன இருக்கிறது என்று யோசித்து பார்த்திருக்கிறீர்களா? அதன்படி, பிரியாணியை விட சுவையான முட்டை மசாலா சாதம் செய்முறையை இந்தப் பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்:
எண்ணெய்,
சோம்பு,
பட்டை,
பிரியாணி இலைகள்,
கிராம்பு,
அன்னாசிப்பூ,
ஏலக்காய்,
வெங்காயம்,
கறிவேப்பிலை,
தக்காளி,
இஞ்சி - பூண்டு விழுது,
உப்பு,
மிளகாய் தூள்,
பிரியாணி மசாலா,
முட்டை
செய்முறை:
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்ற வேண்டும். இந்த எண்ணெய் காய்ந்ததும் அதில் சோம்பு, பட்டை, பிரியாணி இலைகள், கிராம்பு, அன்னாசிப்பூ மற்றும் ஏலக்காய் சேர்த்து வறுக்க வேண்டும்.
இதையடுத்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தை பொந்நிறமாக வதக்க வேண்டும். இதற்கடுத்து கறிவேப்பிலை, சிறியதாக வெட்டிய தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். இப்போது, தக்காளி பாதி வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்க்கலாம்.
இதன் பச்சை வாசனை நீங்கும் வரை கிளறி விட வேண்டும். அடுத்ததாக உப்பு, மிளகாய் தூள், பிரியாணி மசாலா சேர்க்க வேண்டும். இந்த மசாலா அனைத்தும் வெந்ததும் மூன்று முட்டைகளை உடைத்து ஊற்றலாம்.
முட்டை வெந்த பின்னர் பாஸ்மதி சாதத்தை கலந்து எடுத்தால், சுவையான முட்டை மசாலா சாதம் தயாராகி இருக்கும்.