கோதுமையில் சப்பாத்தி, பூரி என்றாலே சிலர் சாப்பிட விரும்பமாட்டார்கள். அதுவே தோசை என்றால் கிட்டவே நெருங்க மாட்டார்கள். ஆனால் இப்படி கோதுமை தோசை சுட்டுக் கொடுத்தால் 10 தோசை பறந்து போகும். இந்த கோதுமை தோசையை நீங்கள் ரேசன் கடையில் கொடுக்கும் கோதுமையிலே செய்து சாப்பிடலாம். அவ்வளவு சுவையாக இருக்கும்.
Advertisment
சுவையான கோதுமை தோசை எப்படி செய்வது என்பது செஃப் தீனாவின் யூடியூப் வீடியோவில் விளக்கப்பட்டுள்ளது. அந்த டேஸ்டி ரெசிபியை இப்போது பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கோதுமை – ½ கிலோ
உளுந்து – 150 கிராம்
காய்ந்த மிளகாய் – 5
வெந்தயம் – ½ டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை, உளுந்து, வெந்தயம், வரமிளகாய் சேர்த்து தண்ணீர் சேர்த்து 2-3 மணி நேரத்திற்கு ஊறவைக்க வேண்டும்.
நன்றாக ஊறிய பின்னர் கிரைண்டர் அல்லது மிக்ஸியில் போட்டு தோசை மாவுக்கு ஏற்ப அரைத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் உப்பு, கறிவேப்பிலை, சீரகம் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
இதனை அப்படியே 2 மணி நேரத்திற்கு சற்று புளிக்க வைக்க வேண்டும். பின்னர் எடுத்து தோசைக்கல்லில் ஊற்றி தோசை சுட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.
அவ்வளவு டேஸ்டியான கோதுமை தோசை ரெடி, நல்ல ஒரு காரசாரமான வெங்காயம் தக்காளி சட்னி அரைத்து சேர்ந்து சாப்பிட்டால், சாப்பிட்டுக் கொண்டே இருப்பீர்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“