ஐஸ்கிரீம் பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது. குறிப்பாக, வெயில் காலத்தில் ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டும் என பலரும் விரும்புவார்கள். அந்த வகையில் வீட்டிலேயே ஈசியாக ஐஸ்கிரீம் செய்வது எப்படி என தற்போது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கஸ்டர்ட் பொடி,
பால்,
சர்க்கரை,
ஃப்ரெஷ் கீரிம்.
செய்முறை:
ஒரு சிறிய பாத்திரத்தில் இரண்டு டேபிள் ஸ்பூன் கஸ்டர்ட் பொடி எடுத்துக் கொள்ள வேண்டும். கஸ்டர்ட் பொடி இல்லாதவர்கல் கார்ன்ஃபிளவர் மாவு பயன்படுத்தலாம். இத்துடன் அரை கப் அளவிற்கு காய்ச்சி ஆற வைத்த பால் சேர்த்துக் கொள்ளலாம். இந்த இரண்டையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
இதனை ஒரு ஒரமாக வைத்து விட்டு, அடிகனமான பாத்திரத்தில் அரை லிட்டர் அளவிற்கு பால் ஊற்றிக் கொள்ள வேண்டும். பால் பொங்கி வரும் போது ஒரு கப் சர்க்கரை சேர்க்க வேண்டும். இந்த சர்க்கரை கரைந்ததும், முதலில் எடுத்து வைத்திருந்த கஸ்டர்ட் பொடி மற்றும் பாலை இதில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
இந்த பால் கெட்டியாக வந்ததும் 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து, பின்னர் அடுப்பை ஆஃப் செய்து விடலாம். இந்த பால் நன்றாக ஆறிய பின்னர், 2 மணி நேரத்திற்கு ஃப்ரீசரில் வைக்க வேண்டும். இப்படி ஃப்ரீசரில் வைத்து எடுத்ததும் கெட்டியாக இருக்கும்.
இதையடுத்து, சிறிய துண்டுகளாக இவற்றை வெட்டி பீட்டர் அல்லது மிக்ஸியில் அரைத்து கிரீம் பதத்திற்கு கொண்டு வர வேண்டும். இத்துடன் ஃப்ரெஷ் கீரிம் சிறிதளவு சேர்க்க வேண்டும். இவ்வாறு செய்ததும் 8 மணி நேரத்திற்கு ஃப்ரீசரில் வைக்க வெண்டும். இப்படி செய்தால் சுவையான ஐஸ்கிரீம் தயாராகி விடும்.