ஒரு கப் உளுந்து இருந்தா போதும்: வீட்டிலேயே ஜாங்கிரி செய்வது ரொம்ப ஈசி

ஸ்வீட் சாப்பிட ஆசையா? இந்த பொருட்கள் இருந்தால் போதும் வீட்டிலே எளிமையாக செய்யலாம்; சிம்பிள் ரெசிபி இங்கே

ஸ்வீட் சாப்பிட ஆசையா? இந்த பொருட்கள் இருந்தால் போதும் வீட்டிலே எளிமையாக செய்யலாம்; சிம்பிள் ரெசிபி இங்கே

author-image
WebDesk
New Update
jangri

ஸ்வீட் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் ஜாங்கிரி என்றால் பலருக்கு கொள்ளைப் பிரியம். ஜாங்கிரியின் கலர், கடிக்கும் போது வாயுக்குள் ஜீரா செய்யும் மாயம் என ஜாங்கிரி சாப்பிடுவது சிலருக்கு பேரானந்தம்.

Advertisment

இந்த ஜாங்கிரியை நாம் பெரும்பாலும் கடைகளில் வாங்கி தான் சாப்பிடுவோம். ஆனால் வீட்டில் உள்ள எளிய பொருட்களைக் கொண்டே இந்த ஜாங்கிரியை நீங்களும் செய்யலாம். சூப்பரான, சிம்பிளான ஜாங்கிரி ரெசிபியை இப்போது பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

உளுந்து – 1 கப்

Advertisment
Advertisements

சக்கரை – 1 ½ கப்

கேசரி பவுடர் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

ஏலக்காய் பொடி – ½ ஸ்பூன்

எலுமிச்சை – 1

கார்ன் மாவு – 3 ஸ்பூன்

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

முதலில் உளுந்தை 2 மணி நேரத்திற்கும் மேலாக ஊறவைத்து தண்ணீரை வடிகட்டிக் கொள்ள வேண்டும். இதனை மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர், ஒன்றரை கப் சக்கரை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். சக்கரை கரைந்து பாகு பதத்தில் வந்த உடன் அதில் சேகரி பவுடர் மற்றும் உப்பு சேர்க்க வேண்டும். அரை கம்பி பதம் வந்த உடன் இதனை இறக்கி வைக்க வேண்டும்.

இறக்கி வைத்த பாகில் ஏலக்காய் பொடி மற்றும் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும். 

பின்னர் அரைத்து வைத்த உளுந்து மற்றும் கார்ன் மாவை ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ள வேண்டும். மேலும் தேவைப்பட்டால் கேசரி பவுடர் சேர்த்து கலந்துக் கொள்ளலாம். 5 நிமிடத்திற்கு மாவை நன்றாக கலக்கிக் கொள்ள வேண்டும்.

இப்போது அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி காய வைக்க வேண்டும். பின்னர் மாவை காலி எண்ணெய் பாக்கெட்டுக்குள் போட்டு, ஜாங்கிரிகளை சுட்டு எடுக்க வேண்டும்.

நன்றாக வெந்த உடன் இந்த ஜாங்கிரிகளை ஜீராவில் போட்டு ஊற வைக்க வேண்டும். நன்றாக ஊறிய பின் டேஸ்டியான ஜாங்கிரிகளை எடுத்து சுவைக்கலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Food Food Recipes

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: