வயிற்றுப் புண்ணுக்கு எதிரி... மறந்து போன நம்ம பாரம்பரிய ரெசிபி; இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க!
வயிற்று புண்களை குணப்படுத்தும் பாரம்பரியமான ஜவ்வரிசி உருண்டை எவ்வாறு செய்யலாம் என்று இந்த சமையல் குறிப்பில் பார்க்கலாம். இவை மிகவும் சுவையாகவும் இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
வயிற்று புண்களை குணப்படுத்தும் பாரம்பரியமான ஜவ்வரிசி உருண்டை எவ்வாறு செய்யலாம் என்று இந்த சமையல் குறிப்பில் பார்க்கலாம். இவை மிகவும் சுவையாகவும் இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
நம்முடைய பாரம்பரியமான உணவு வகைகளில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன. அந்த வகையில், வயிற்று புண்களை குணப்படுத்தும் ஜவ்வரிசி உருண்டை செய்முறை குறித்து இதில் காணலாம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
ஜவ்வரிசி - 350 கிராம், உப்பு - சிறிதளவு, தேங்காய், ஏலக்காய் தூள் மற்றும் அரை கப் சர்க்கரை
செய்முறை:
Advertisment
Advertisements
ஜவ்வரிசியை சிறிதளவு உப்பு மற்றும் சிறிது சிறிதாக சுடுதண்ணீர் சேர்த்து கலக்க வேண்டும். இவ்வாறு கலக்கிய பின்னர் ஒரு மூடி போட்டு 15 நிமிடங்கள் அப்படியே வைக்க வேண்டும். இதன் பின்னர், மீண்டும் சுடுதண்ணீர் சேர்த்து இதனை பிசைந்து 15 நிமிடங்களுக்கு மூடி வைக்க வேண்டும்.
நடுத்தர அளவில் இருக்கும் தேங்காயை சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை, மிக்ஸியில் ஒரு முறை அரைத்து அதன் பின்னர் வெளியே எடுத்து விட வேண்டும். இந்த தேங்காயுடன், ஏலக்காய் தூள் மற்றும் சர்க்கரை சேர்த்து இனிப்பான பூரணம் தயாரிக்க வேண்டும்.
ஜவ்வரிசியை சிறு வட்டுகளாக தட்டி, தேங்காய் பூரணத்தை உள்ளே வைத்து உருண்டைகளாக உருட்ட வேண்டும். இந்த உருண்டைகளை இட்லி பாத்திரத்தில் வேக வைக்கவும். குறிப்பாக, உருண்டைகள் கண்ணாடி போல் வரும் வரை வேக வைக்க வேண்டும்.
இவ்வாறு செய்தால் சுவையான ஜவ்வரிசி உருண்டை தயாராகி விடும். இதனை தேங்காய் பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். குறிப்பாக, வயிற்றுப் புண்களை ஆற்றும் தன்மை இந்த உணவிற்கு இருக்கிறது.