கல்யாண வீட்டு கேசரி... மிருதுவாக வர இத மட்டும் சேருங்க போதும்; செம்ம டேஸ்ட்!
கல்யாண வீட்டு ஸ்டைலில் வீடே மணக்கும் அளவிற்கு ஒரு கேசரி எப்படி சுவையாக செய்வது என்று பார்க்கலாம். கல்யாண வீட்டில் எப்படி பார்த்ததும் சாப்பிட தூண்டுமோ அதேபோல் இருக்கும்.
கல்யாண வீட்டு ஸ்டைலில் வீடே மணக்கும் அளவிற்கு ஒரு கேசரி எப்படி சுவையாக செய்வது என்று பார்க்கலாம். கல்யாண வீட்டில் எப்படி பார்த்ததும் சாப்பிட தூண்டுமோ அதேபோல் இருக்கும்.
திருமண விழாக்களில் பரிமாறப்படும் கேசரியின் சுவை நம்மில் பலருக்கும் பிடித்தமான ஒன்று. அதே அருமையான சுவையில் கேசரியை உங்கள் வீட்டிலேயே செய்யலாம். இதனை எப்படி செய்வது என்று டீக்கடை கிச்சன் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
ரவை - 200 கிராம் (1 கப்) சன்ஃபிளவர் ஆயில் - 50 மில்லி (கால் கப்) நெய் - 50 மில்லி (கால் கப்) ஆரஞ்சு ரெட் கேசரி பவுடர் - 3 சிட்டிகை முந்திரி பருப்பு - 25 கிராம் உலர் திராட்சை - 25 கிராம் தண்ணீர் - 1 லிட்டர் (4 கப்) சர்க்கரை - அரை கிலோ (2 கப்) ஏலக்காய் தூள் - கால் டீஸ்பூன் கண்டன்ஸ்ட் மில்க் - 50 மில்லி
செய்முறை:
Advertisment
Advertisements
ஒரு அகலமான பாத்திரத்தில் எண்ணெய், நெய் சேர்த்து சூடாக்கவும். அதில் கேசரி பவுடரைச் சேர்த்து கலந்த பின், ரவையைச் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். ரவை வறுபட்டதும், முந்திரி, உலர் திராட்சையைச் சேர்த்து வறுக்கவும்.
தனியாக ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து, ரவைக் கலவையில் மெதுவாக ஊற்றி, கட்டியில்லாமல் கிளறவும். ரவை நன்கு வெந்து கெட்டியானதும், சர்க்கரையை சிறிது சிறிதாகச் சேர்த்து, கரைந்து ஒட்டாமல் வரும் வரை கிளறவும்.
சர்க்கரை கரைந்ததும், ஏலக்காய்த்தூள், விருப்பப்பட்டால் கண்டன்ஸ்ட் மில்க் சேர்த்து நன்கு கலந்து இறக்கினால், கல்யாண வீட்டு கேசரி தயார்!
இது உங்கள் விரல்களில் ஒட்டாமல், சுவையாகவும், மென்மையாகவும் இருக்கும். இந்த ரெசிபியை முயற்சி செய்து பாருங்கள் கல்யாண வீட்டு சுவை இனி உங்கள் வீடுகளிலும் தயார்.