சத்து நிறைந்த உணவு பொருட்கள் பெரும்பாலும் சுவையாக இருக்காது என்று நிறைய பேர் கருதுகின்றனர். ஆனால், சுவைக்கு சிறிதும் குறைவின்றி சத்தான உணவுகளை சாப்பிட முடியும். அந்த வகையில் துளியும் எண்ணெய் சேர்க்காமல், சுவையான கருப்பு கவுனி அரிசி கஞ்சியை எப்படி செய்யலாம் என்று இதில் காண்போம்.
தேவையான பொருட்கள்:
கருப்பு கவுனி அரிசி,
பச்சை மிளகாய்,
சின்ன வெங்காயம்,
பூண்டு,
மிளகு,
சீரகம்,
கல் உப்பு,
தேங்காய் பால் அல்லது பாதாம் பால்.
செய்முறை:
கருப்பு கவுனி அரிசியை நன்றாக கழுவிய பின்னர், சுமார் 4 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். இவ்வாறு நன்றாக தண்ணீரில் ஊரிய அரிசியை மிக்ஸியில் ரவை பதத்திற்கு அரைக்க வேண்டும்.
அரைத்து வைத்திருக்கும் அரிசி மற்றும் ஊற வைத்த தண்ணீர் ஆகியவற்றை குக்கரில் சேர்க்க வேண்டும். இத்துடன் நான்கு பச்சை மிளகாய், 20 சின்ன வெங்காயம், ஒரு கைப்பிடி பூண்டு, 15 மிளகு, ஒரு டேபிள் ஸ்பூன் சீரகம் மற்றும் தேவையான அளவு கல் உப்பு சேர்த்து கலக்க வேண்டும்.
இந்தக் கலவையை குக்கரில் மூன்று முதல் ஐந்து விசில் வரும் வரை வேக வைக்கலாம். இதையடுத்து, ஒன்றரை கப் தேங்காய் பால் அல்லது பாதாம் பாலை இதில் சேர்த்து கலக்கலாம். இவ்வாறு செய்தால் டேஸ்டியான கருப்பு கவுனி அரிசி கஞ்சி தயாராகி விடும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.