கேரள ஸ்டைலில் தேங்காய் பாலை பயன்படுத்தி செய்யப்படும் கிண்ணத்தப்பம் எப்படி செய்வது என்று மெட்ராஸ் சமையல் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம். பச்சரிசி வைத்து செய்வதால் ஜெல்லி மாதிரி மிருதுவாகவும் அற்புதமான சுவையில் இருக்கும்.
Advertisment
தேவையான பொருட்கள்:
1 கப் பச்சரிசி 2 கப் தேங்காய் 1 கப் சர்க்கரை 5 ஏலக்காய் 1 முட்டை தேவையான தண்ணீர்
செய்முறை
Advertisment
Advertisements
ஒரு கப் பச்சரிசி எடுத்து நன்கு கழுவி ஊறவைத்து மிக்ஸி ஜாரில் சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும். பின்னர் இதனை ஒரு பவுலில் மாற்றி வைக்கவும்.
து ருவிய தேங்காய் எடுத்து அதையும் அறைத்து பால் எடுத்துக் கொள்ளவும். அதே மாதிரி சர்க்கரை, ஏலக்காய், முட்டை ஆகியவற்றையும் அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் இவை அனைத்தும் ஒன்றாக கலந்து கொள்ளவும்.
அடுத்ததாக் இதை ஒரு பானில் எடுத்து ஊற்றி இட்லி குக்கரில் தண்ணீர் ஊற்றி எப்போதும் போல வேக வைத்து நறுக்கி எடுத்துக் கொள்ளலாம்.