சப்பாத்திக்கு சூப்பர் காம்பினேஷனாக இன்று வரை விளங்குவது குருமா தான். அதன்படி, உருளைக் கிழங்கு, பட்டாணி ஆகியவை சேர்த்து காரசாரமாக குருமா தயாரிப்பது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
உருளைக் கிழங்கு - 250 கிராம்,
வெங்காயம் - 2,
தக்காளி - 2,
பட்டாணி - ஒரு கப்,
இஞ்சி - பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
காஷ்மீர் மிளகாய் தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
தண்ணீர்,
எண்ணெய்.
செய்முறை:
முதலில் உருளைக் கிழங்கை வேக வைத்து, தோல் சீவி, சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், அடுப்பில் கடாய் வைத்து அதில் சிறிது பெருங்காயத்தூள் சேர்த்து பொறிக்க வேண்டும்.
இதையடுத்து, சீரகம், வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, அரைத்த தக்காளி, உப்பி, மஞ்சள் தூள், மிளகாய் தூள் ஆகிய அனைத்தும் சேர்த்து இதன் பச்சை வாசனை நீங்கும் வரை நன்றாக வதக்கவும்.
இதற்கடுத்து, பட்டாணி மற்றும் உருளைக் கிழங்கு சேர்த்து கலக்கலாம். இதனுடன் சிறிது உப்பு மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து மூடி விடலாம். இந்தக் கலவை 10 நிமிடங்களுக்கு வெந்த பின்னர், கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான உருளைக் கிழங்கு பட்டாணி குருமா தயாராகி விடும்.