இது உங்களுக்கு தெரியுமா? மசால் தோசை போல் மசால் இட்லியாம்! இப்பவே ட்ரை பண்ணி பாருங்க
மசால் தோசைக்கு உருளைக்கிழக்கு மசால் வைத்து செய்வோம், அதேபோல் மசால் இட்லியில் காய்கறிகள் வைத்து சுவையாக சாப்பிடலாம். எப்படி செய்வது என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
இட்லி, தோசை நம் வீடுகளில் பெரும்பாலும் செய்யப்படும் உணவு. தோசை மொறு மொறுவென்று இருப்பதால் அனைவரும் விரும்பு சாப்பிடுவோம். ஆனால் இட்லி என்றால் வேண்டாம் என்போம். ஆனால் இட்லி உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இட்லி வேக வைத்து சாப்பிடும் உணவு என்பதால் சீக்கிரம் செரிமானம் ஆகிறது. இட்லி வேண்டாம் என்று சொல்பவர்களும் இப்படி செய்யதால் விரும்பி சாப்பிடுவார்கள். ஆம், மசால் தோசை போல் காய்கறிகள் வைத்து மசால் இட்லி செய்யலாம். ஆனால் இதற்கு இட்லி மாவு தேவையில்லை.
Advertisment
தேவையான பொருட்கள்
ரவை - 1 கப் உருளைக்கிழக்கு - 2 வெங்காயம் -1 பச்சை மிளகாய் - 1 கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு மிளகாய்த்தூள் - 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு தயிர் - 1 கப்
செய்முறை
மாவு தயாரிக்க முதலில் ஒரு பாத்திரத்தில் ரவை எடுத்து கொள்ளுங்கள். எந்த கப்பில் ரவை எடுக்கிறீர்களோ அதே கப்பில் தயிர், தண்ணீர் எடுத்து ஒன்றாக சேர்த்து கலக்கவும். பிறகு அதில் உப்பு சேர்த்து கலக்கி 10 நிமிடம் மூடி வைக்கவும். 10 நிமிடம் கழித்து கொஞ்சம் ஈனோ சேர்த்து வைக்கவும். இட்லிக்கான மாவு தயார்.
இப்போது, மசால் தயார் செய்ய வேண்டும். ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கை வேக வைத்து எடுத்து மசித்து கொள்ளுங்கள். வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்க்கவும். அடுத்து, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளுங்கள். மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு கொஞ்சமாக சேர்த்து பிசையவும். கடைசியாக சிறிது லெமன் சாறு சேர்த்து கலக்கவும். அவ்வளவு தான், மசாலை சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும். தேவைப்பட்டால் உருளைக்கிழங்கோடு கேரட் , பீன்ஸ் போன்ற காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.
இட்லி ஊற்றலாம்
அடுப்பில் இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து விடுங்கள். இட்லி தட்டில் டம்ளர் அல்லது கரண்டி கொண்டு கொஞ்சமாக மாவு ஊற்றலாம். டம்ளரில் முதலில் லேசாக எண்ணெய் தடவி கொள்ளுங்கள். இப்போது கொஞ்சம் மாவு ஊற்றுங்கள் அடுத்து அதன் மேல் உருட்டி வைத்திருக்கும் மசாலாவை வைத்து மேலும் ஒரு கரண்டி மாவை ஊற்றுங்கள். இதே முறையில் இட்லி தட்டில் கூட ஊற்றலாம்.
அவ்வளவு தான் இப்போது இட்லி பாத்திரத்தை மூடி வைத்து விடுங்கள். எப்பவும் போல் இட்லியை வேக வைத்து எடுங்கள். சுடச் சுடச் மசால் இட்லியை பரிமாறுங்கள். காய்கறிகள் இருப்பதால் சட்னி எதுவும் தேவையில்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.