கல்யாண வீட்டு ஸ்டைலில் சுவையான மிளகு ரசம் வைப்பதற்கான செய்முறையை சமையற் கலைஞர் வெங்கடேஷ் பட் தெரிவித்துள்ளார். அதற்கு தேவையான பொருள்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்:
இரண்டு டேபிள் ஸ்பூன் மிளகு,
ஒரு டேபிள் ஸ்பூன் சீரகம்,
100 கிராம் துவரம் பருப்பை ஒன்றரை லிட்டர் நீரில் சேர்த்து குக்கரில் 6 விசில் வைத்த பருப்பு நீர்,
ஒன்றரை டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்,
4 காய்ந்த மிளகாய்கள்,
1/4 டீஸ்பூன் கடுகு
ஒரு கொத்து கறிவேப்பிலை
நறுக்கிய தக்காளிகள் இரண்டு,
1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்,
25 கிராம் புளியை 100 மி.லீ நீரில் கரைத்து எடுத்த கரைசல்,
1/2 டீஸ்பூன் பெருங்காயம் மற்றும்
தேவையான அளவு உப்பு
செய்முறை:
ரசத்தில் மிளகின் தன்மை அதிகமாக இருக்க வேண்டுமென்பதால் இதில் பூண்டு சேர்க்க வேண்டாம். இரண்டு டேபிள் ஸ்பூன் மிளகை அடுப்பில் உள்ள பாத்திரத்தில் போட்டு பொறிக்க வேண்டும். அதன் பின்னர், அதே பாத்திரத்தில் ஒரு டேபிள் ஸ்பூன் சீரகத்தை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். அதன் பின்னர், இரண்டையும் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதையடுத்து, ஒரு பாத்திரத்தில் ஒன்றரை டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய், 4 காய்ந்த மிளகாய், 1/4 டீஸ்பூன் கடுகு, ஒரு கொத்து கறிவேப்பிலை, நறுக்கிய தக்காளி, புளி கரைசல், 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் ஆகியவை சேர்த்து வதக்க வேண்டும். 7 நிமிடங்களுக்கு தக்காளி மற்றும் புளியின் பச்சைத் தன்மை நீங்கும் வரை கொதிக்க விட வேண்டும். அதன் பின்னர், பருப்பு நீரை சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். அதன்பின்னர், அரைத்து எடுத்த ரசப்பொடியை ஒன்றரை டேபிள் ஸ்பூன் போட வேண்டும். இதன் பின்னர், தேவையான அளவு உப்பு, அரை டீஸ்பூன் பெருங்காயம், கொத்தமல்லி ஆகியவை சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்க வேண்டும். இவ்வாறு செய்தால் சுவையான மிளகு ரசம் தயாராகி விடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“