சிக்கன் அல்லது மட்டன் பிரியாணிக்கு வேறு ஏதாவது மாற்று இருக்கிறதா என்று தேடுபவர்களுக்கு இந்த மஷ்ரூம் பிரியாணி சரியாக இருக்கும். இதனை எப்படி எளிதாக செய்யலாம் என்று காண்போம்.
தேவையான பொருட்கள்:
பட்டை,
கிராம்பு,
ஏலக்காய்,
கல்பாசி,
வரமிளகாய்,
தனியா,
பிரிஞ்சி இலை,
சின்ன வெங்காயம்,
இஞ்சி,
பூண்டு,
தக்காளி,
கொத்தமல்லி,
நெய்,
கடலை எண்ணெய்,
தயிர்,
எலுமிச்சை சாறு,
உப்பு,
மஷ்ரூம் மற்றும்
பாஸ்மதி அரிசி.
செய்முறை:
பிரியாணிக்கு தேவையான அளவிற்கு பட்டை, கிராம்பு, ஏலக்காய், கல்பாசி, மூன்று வரமிளகாய், தனியா, பிரிஞ்சி இலை ஆகியவற்றை பொடியாக அரைக்க வேண்டும். இதனை தனியாக எடுத்து விட்டு, அதே மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, தக்காளி, கொத்தமல்லி ஆகிய அனைத்தையும் தண்ணீர் சேர்க்காமல் அரைக்க வேண்டும்.
இப்போது, அடுப்பில் பிரியாணி செய்வதற்கான பாத்திரத்தை வைத்து அதில் சிறிது நெய், கடலை எண்ணெய் மற்றும் அரைத்து வைத்த மசாலா அனைத்தையும் சேர்த்து வதக்க வேண்டும். இத்துடன் ஒரு டேபிள் ஸ்பூன் தயிர், அரை எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து கலக்க வேண்டும்.
இதில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் போது, கழுவி வைத்த மஷ்ரூமை சேர்த்து கலந்து மூடி விடவும். இது கொதித்து வரும் போது ஒரு கப் பாஸ்மதி அரிசி, ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து மூடி விட வேண்டும். இந்த தண்ணீர் முற்றிலும் வற்றும் வரை வேக வைத்து எடுத்தால் சுவையான மஷ்ரூம் பிரியாணி ரெடியாக இருக்கும்.