Advertisment

நல்லெண்ணெய்யில் செய்து பாருங்க; ருசியான மட்டன் கறி இட்லி ரெசிபி இங்கே

மட்டன் கறி இட்லி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
567

சுவையான மட்டன் கறி இட்லி செய்வது குறித்து இங்கு பார்ப்போம். 

Advertisment

நல்லெண்ணெய் -  தேவையான அளவு 
மட்டன் கொத்துக்கறி - 1/2 கிலோ 
உப்பு - தேவையான அளவு 
மஞ்சள் - 1/2 ஸ்பூன் 
மிளகாய் தூள் - காரத்திற்கு ஏற்ப 
இஞ்சி பூண்டு விழுது 
கடலை பருப்பு- 100 கி 
உளுந்தம் பருப்பு - 100 கி
மிளகு - 50 கிராம் 
கருப்பு எள்ளூ - 50 கி 
சீரகம் - 50 கி 
வரமிளகாய் - 50 கி 
இட்லி மாவு - 1 கிலோ

செய்முறை

முதலில் மட்டன் கொத்துக்கறியை நன்கு அலசி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி நன்கு சுத்தம் செய்து வைத்துள்ள மட்டன் கொத்துக்கறியை போட்டு நன்கு வேக வைத்து எடுக்கவும். 

இதனுடன் உப்பு, மஞ்சள் தூள், காரத்திற்கு ஏற்ற மிளகாய் தூள், தேவையான அளவு இஞ்சி பூண்டு விழுது போன்றவற்றை சேர்ந்து அதனுடைய பச்சை வாசனை போகும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.  இப்போது  ஒரு கடாயில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகு, கருப்பு எள்ளு, சீரகம், வரமிளகாய் போன்றவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். வறுத்து எடுத்ததை ஒரு மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும். 

அடுத்ததாக அடுப்பில் இட்லி பாத்திரம் வைத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இட்லி தட்டுகளில் மேல் ஒரு துணி போட்டு, முதலில் இட்லி மாவு அரை கரண்டி ஊற்றவும், அடுத்து நாம் தயாரித்து வைத்துள்ள மட்டன் கொத்து கறி கலவையை சிறிதளவு வைக்கவும்.

இப்போது மறுபடியும் அரை கரண்டி அளவு மாவை ஊற்றி பாத்திரத்தை மூடி வேக வைக்கவும். அடுத்து இட்லி வெந்த பின் தயாரித்து வைத்துள்ள பொடியை மேலே தூவி சாப்பிட்டால் மட்டன் கறி இட்லி ரெடி.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment