மட்டனை இந்த 4 பொருள் சேர்த்து ஊற வச்சு... மணக்க மணக்க குக்கரில் இப்படி குழம்பு; ஈஸி ஸ்டெப்ஸ் பாருங்க!
சுவையான மட்டன் குழம்பு எப்படி சுலபமாக தயாரிக்கலாம் என்று இந்த சமையல் குறிப்பில் பார்க்கலாம். குறிப்பாக, குழம்பு தயாரிப்பதற்கு முன்பாக சில மசாலா பொருட்களை போட்டு மட்டனை ஒரு மணி நேரம் ஊற வைத்தால் அதன் சுவை கூடுதலாக இருக்கும்.
சுவையான மட்டன் குழம்பு எப்படி சுலபமாக தயாரிக்கலாம் என்று இந்த சமையல் குறிப்பில் பார்க்கலாம். குறிப்பாக, குழம்பு தயாரிப்பதற்கு முன்பாக சில மசாலா பொருட்களை போட்டு மட்டனை ஒரு மணி நேரம் ஊற வைத்தால் அதன் சுவை கூடுதலாக இருக்கும்.
அசைவ உணவு பிரியர்களுக்கு பெரும்பாலும் மிகவும் பிடித்த உணவாக மட்டன் குழம்பு இருக்கும். அதன்படி, சுவையான மட்டன் குழம்பு ரெசிபியை இப்பதிவில் காணலாம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
மட்டன், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, எண்ணெய், சோம்பு, மிளகு, கிராம்பு, ஏலக்காய், பட்டை, சின்ன வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, காஷ்மீர் மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா தூள்.
செய்முறை:
Advertisment
Advertisements
ஒரு கிலோ மட்டனை நன்றாக கழுவி சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த மட்டனுடன் அரை ஸ்பூன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், 100 மிலி தயிர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
அடுப்பில் கடாய் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்ற வேண்டும். இத்துடன் ஒரு ஸ்பூன் சோம்பு, அரை ஸ்பூன் மிளகு, 2 கிராம்பு, ஏலக்காய், ஒரு துண்டு பட்டை சேர்த்து வறுக்க வேண்டும். அதன் பின்னர், 100 கிராம் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கியது இரண்டு தக்காளியை நறுக்கி போட்டு மீண்டும் வதக்க வேண்டும்.
இதையடுத்து, வதக்கி வைத்த அனைத்தையும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் அரைக்க வேண்டும். இப்போது, ஒரு குக்கரில் சிறிது எண்ணெய் ஊற்றி, அத்துடன் இரண்டு கிராம்பு, ஏலக்காய், ஒரு துண்டு பட்டை, சிறிதளவு கறிவேப்பிலை, ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலக்க வேண்டும்.
இதில் இருக்கும் பச்சை வாசனை நீங்கியதும் ஊற வைத்த மட்டனை இத்துடன் சேர்க்கலாம். இந்த மசாலாவுடன் மட்டனை சுமார் 5 நிமிடங்களுக்கு வதக்க வேண்டும். மட்டனில் இருந்து தண்ணீர் வெளியாகி வேகும் போது, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், மூன்று ஸ்பூன் மல்லி தூள், ஒரு ஸ்பூன் காஷ்மீர் மிளகாய் தூள் சேர்த்து கலக்க வேண்டும்.
இதற்கடுத்து, அரைத்து வைத்திருக்கும் மசாலாவை மட்டனுடன் சேர்த்து கலக்க வேண்டும். இதன் தொடர்ச்சியாக தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரை மூடி 5 விசில் வரும் வரை வேகவைக்க வேண்டும். அதன் பின்னர், குக்கரை திறந்து 10 நிமிடங்களுக்கு குழம்பை கொதிக்க விட வேண்டும். இப்போது, சிறிதளவு கரம் மசாலா தூள் சேர்க்கலாம்.
இவ்வாறு செய்தால் சுவையான மட்டன் குழம்பு தயாராகி விடும். இதன் சுவை அனைவரும் விரும்பும் வகையில் இருக்கும்.