வெங்காயம் – 5
பூண்டு – 6 பல்
கறிவேப்பிலை – 1 கைப்பிடி
புளி – சிறிதளவு
வர மிளகாய் – 7
தண்ணீர் – 1/2 கப்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
உப்பு – சிறிதளவு
நல்லெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு சிறிய பாத்திரத்தில் சிறிதளவு புளி மற்றும் 6-7 வரமிளகாயை எடுத்து, அதில் அரை கப் தண்ணீர் ஊற்றி, 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு ஒரு நீளமான கம்பி எடுத்து, அதில் பெரிய வெங்காயத்தை செருகி அடுப்பில் மிதமான தீயில் வைத்து சுட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் பூண்டு பற்களையும் அப்படி நெருப்பில் சுட்டு எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்து வெங்காயத்தின் தோலை நீக்கிவிட்டு, அவற்றை பிசைந்து கொள்ள வேண்டும்.
பின்னர் மிக்சர் ஜாரில் வெங்காயம், பூண்டு, ஊற வைத்த புளி மற்றும் வரமிளகாயை நீருடன் அப்படியே ஜாரில் ஊற்ற வேண்டும். பின் அதில் கறிவேப்பிலை, சீரகம், உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது சுடு சோற்றில் 1 கரண்டி இந்த சட்னி போட்டு 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி கலந்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“