தோசை மற்றும் சப்பாத்தி ஆகியவற்றுக்கு சைட் டிஷ்ஷாக வைத்து சாப்பிடக் கூடிய சுவையான வெங்காய குருமா எப்படி செய்வது என சமையற் கலைஞர் தீனா தெரிவித்துள்ளார். அதன் ரெசிபியை காணலாம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
வெங்காயம் - 1 கிலோ தக்காளி - 500 கிராம் உருளைக்கிழங்கு - 500 கிராம் மிளகாய் பொடி - 3 டேபிள் ஸ்பூன் கறி மசாலா - 2 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி பொடி - 2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் பொடி - 1 டேபிள் ஸ்பூன் புதினா இலைகள் - தேவையான அளவு கொத்தமல்லி இலைகள் - தேவையான அளவு தேங்காய் - 1 சோம்பு - 1 டேபிள் ஸ்பூன் பட்டை - 2 ஏலக்காய் - 5 to 6 இஞ்சி பூண்டு விழுது - 100 கிராம் உப்பு - தேவையான அளவு கடலை எண்ணெய் - 200 - 300 மி.லீ
செய்முறை:
Advertisment
Advertisements
தக்காளி மற்றும் உருளைக் கிழங்கை வெட்டி அவற்றை முதலில் தண்ணீர் சேர்த்து வேக வைக்க வேண்டும். துருவிய தேங்காய், சோம்பு, பட்டை மற்றும் ஏலக்காய் ஆகிய அனைத்தையும் சேர்த்து நன்றாக மிக்ஸியில் அரைக்க வேண்டும்.
முதலில் வேக வைத்த தக்காளி மற்றும் உருளைக் கிழங்கு ஆகியவை நான்கு விசில் வரை வெந்ததும் அடுப்பை ஆஃப் செய்து விட வேண்டும். இதையடுத்து, அடுப்பில் ஒரு கடாய் வைத்து கடலை எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். அதன் பின்னர், இஞ்சி பூண்டு விழுது, கறிவேப்பிலை, வெங்காயம் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
இவை 70 சதவீதம் வதங்கியதும் மஞ்சள் பொடி, கறி மசாலா, கொத்தமல்லி பொடி, புதினா இலைகள், கொத்தமல்லி இலைகள் அனைத்தையும் சேர்த்து கலக்க வேண்டும். இதற்கடுத்து, வேகவைத்த உருளைக் கிழங்கை லேசாக மசித்து இதனுடன் சேர்க்க வேண்டும்.
இவை ஓரளவிற்கு வதங்கியதும் வேக வைத்த தக்காளியை இதில் சேர்க்க வேண்டும். இந்தக் குருமா கொதிக்கும் போது முதலில் அரைத்து வைத்திருந்த மசாலாவையும் சேர்த்து கிளற வேண்டும். இதில் தேங்காய் கொதித்ததும் அடுப்பை ஆஃப் செய்து இறக்கி விடலாம்.
இவ்வாறு செய்தால் சுவையான வெங்காய குருமா தயாராகி விடும்.