ஃப்ரைட் ரைஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அந்தவகையில் சுவையான பன்னீர் ஃப்ரைட் ரைஸ் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பன்னீர் - 150 கிராம்
தக்காளி - 2
பூண்டு பல் - 3
அரிசி - 2 கப்
முட்டைக்கோஸ் - 100 கிராம்
வெங்காயம் - 1
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மிளகு பொடி - 1/2 ஸ்பூன்
சோயா சாஸ் - 2 ஸ்பூன்
உப்பு, எண்ணெய், கொத்தமல்லி - போதுமான அளவு.
செய்முறை
ஃப்ரைட் ரைஸ் செய்வதற்கு முதலில் அரிசியை 20 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் குக்கரில் சோறு குழையாமல் உதிரி உதிரியாக வேக வைத்து எடுக்கவும். அடுத்து வெங்காயம், தக்காளி, முட்டைக்கோஸ் ஆகியவற்றை பொடியாக நறுக்கி தயாராக எடுத்து வைக்கவும்.
இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயம், முட்டைக்கோஸ் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் இதில் தக்காளி, மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். அடுத்து வேக வைத்துள்ள சாதத்தை சேர்த்து சோயா சாஸ் மற்றும் பொடியாக நறுக்கிய பன்னீர் சேர்த்து வதக்கவும். கடைசியாக இதனுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி நன்றாக கிளறி அடுப்பில் இருந்து இறக்கிவிட சுவையான பன்னீர் ஃப்ரைட் ரைஸ் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“