80 வயது வரை முட்டி வலி வராது; இந்த துவையல் செய்து சாப்பிடுங்க: வெங்கடேஷ் பட் ரெசிபி
பிரண்டை துவையல் எப்படி செய்வது என சமையற் கலைஞர் வெங்கடேஷ் பட் தெரிவித்துள்ளார். முட்டி வலி போன்ற பல்வேறு பிரச்சனைகளை போக்கும் மருத்துவ குணம் பிரண்டையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
சுவையான பிரண்டை துவையலை எப்படி செய்வது என செஃப் வெங்கடேஷ் பட் தெரிவித்துள்ளார். பிரண்டையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதால் இது உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
Advertisment
தேவையான பொருட்கள்:
100 கிராம் பிரண்டை, மூன்று டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய், 10 வரமிளகாய்கள், ஒன்றரை டேபிள் ஸ்பூன் உளுந்து, 50 கிராம் பூண்டு, 100 கிராம் சின்ன வெங்காயம், 2 தக்காளி, 2 டேபிள் ஸ்பூன் கருப்பு எள், 25 கிராம் புளி, தேங்காய், கொத்தமல்லி, தேவையான அளவு உப்பு, ஒரு டேபிள் ஸ்பூன் பெருங்காயத்தூள்
செய்முறை:
Advertisment
Advertisement
பிரண்டையை வெட்டி எடுத்து விட்டு நன்றாக சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து மூன்று டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அதற்குள் வரமிளகாய்கள் சேர்த்து வதக்க வேண்டும். இதன் பின்னர், உளுந்தையும் சேர்த்து தாளிக்க வேண்டும்.
இவற்றை நன்றாக தாளித்ததும் பூண்டு, சின்ன வெங்காயம் ஆகியவற்றையும் சேர்த்து வதக்க வேண்டும். இவை பொந்நிறமாக மாறி வரும் போது, வெட்டி வைத்திருந்த பிரண்டையை சேர்க்க வேண்டும். இப்போது அனைத்தையும் சேர்த்து 2 நிமிடங்கள் கிளற வேண்டும்.
இதையடுத்து, இரண்டு தக்காளிகளை சிறிய துண்டுகளாக வெட்டி இதில் சேர்க்க வேண்டும். இதை வதக்கும் போது ஒரு டேபிள் ஸ்பூன் கருப்பு எள் சேர்க்க வேண்டும். இதற்கடுத்து 25 கிராம் புளியை, 100 மி.லி தண்ணீரில் கரைத்து ஊற்ற வேண்டும். இத்துடன் தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும்.
மேலும் அடுப்பை ஆஃப் செய்து விட்டு துருவி வைத்திருந்த தேங்காயை ஒரு கைப்பிடி அளவு இதில் சேர்த்து வறுக்க வேண்டும். இதன் பின்னர், ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லியை சிறிதாக நறுக்கி சேர்க்க வேண்டும்.
இறுதியாக ஒரு டேபிள் ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து, இவற்றை மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் அரைக்க வேண்டும். அதன்பின்னர், கடுகு, உளுந்து ஆகியவற்றை நல்லெண்ணெய்யில் தாளித்து துவையலில் ஊற்ற வேண்டும்.