மாதத்தில் 6 முறை இந்த சட்னி... தீராத முட்டி வலி கூட பறந்து போகும்: செஃப் வெங்கடேஷ் பட் டிப்ஸ்
பிரண்டை துவையல் எப்படி செய்வது என பிரபல சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட் தெரிவித்துள்ளார். மாதத்திற்கு 6 முறை இந்த பிரண்டை துவையல் எடுத்துக் கொள்வதால் தீராத முட்டி வலி போன்ற பல்வேறு பிரச்னைகள் பறந்துபோகும் என்கிறார் வெங்கடேஷ் பட்.

Advertisment
தேவையான பொருட்கள்:
100 கிராம் பிரண்டை, மூன்று டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய், 10 வரமிளகாய்கள், ஒன்றரை டேபிள் ஸ்பூன் உளுந்து, 50 கிராம் பூண்டு, 100 கிராம் சின்ன வெங்காயம், 2 தக்காளி, 2 டேபிள் ஸ்பூன் கருப்பு எள், 25 கிராம் புளி, தேங்காய், கொத்தமல்லி, தேவையான அளவு உப்பு, ஒரு டேபிள் ஸ்பூன் பெருங்காயத்தூள்
பிரண்டை துவையல் - செய்முறை:
Advertisment
Advertisements
இளம் பிரண்டையை நார் உரித்து சுத்தம் செய்து நன்றாகக் கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும். ஸ்டவ்வைப் பற்ற வைத்து, அதில் ஒரு கடாயை வைத்து, அதில் லேசாக எண்ணெய் விட்டு, ஒரு கைப்பிடி அளவு உளுத்தம் பருப்பு, ஒரு கைப்பிடி துவரம்பருப்பு, அதைவிட கொஞ்சம் குறைவாக கடலைப் பருப்பு போட வேண்டும். 1 டீஸ்பூன் மிளகு, 1 டீஸ்பூன் சீரகம் போடுங்கள். பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
அடுத்து, அதே கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, சின்ன வெங்காயம் 150 கிராம், 1 தக்காளி நறுக்கியது, காய்ந்த மிளகாய் 4, தேவையான அளவு உப்பு போட்டு வதக்குங்கள். நன்றாக வதக்கியதும் அதையும் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அடுத்து, கடாயில் சுத்தம் செய்து வைத்துள்ள பிரண்டையைப் போடுங்கள் அதனுடன் தேங்காய் துருவல் 1 கப் போடுங்கள் நன்றாக வதக்குங்கள். இறுதியாக ஒரு டேபிள் ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து, இவற்றை மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் அரைக்க வேண்டும்.
அதன்பின்னர், கடுகு, உளுந்து ஆகியவற்றை நல்லெண்ணெய்யில் தாளித்து துவையலில் ஊற்ற வேண்டும். சுவையான பிரண்டை துவையல் ரெடி. இந்த பிரண்டை துவையலை சாதத்துடன் போட்டு பிசைந்து சாப்பிடலாம், இட்லி தோசையுடன் சாப்பிடலாம் என்கிறார் வெங்கடேஷ் பட்.