காலை உணவாக எடுத்துக் கொள்ளப்படுவதில் வெண் பொங்கலை பலரும் விரும்புவார்கள். அவ்வாறு பலராலும் விரும்பப்படும் வெண் பொங்கலை ஃபைவ் ஸ்டார் உணவகம் ஸ்டைலில் எப்படி செய்ய வேண்டுமென சமையற் கலைஞர் தீனா கூறியுள்ளார். அதற்கு தேவையான பொருள்கள்,
பொன்னி பச்சரிசி - 1 Glass
பாசி பருப்பு - ½ Glass
கறிவேப்பிலை - தேவையான அளவு
நெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
சீரகம் - ½ TSP
பெருங்காயம் - சிறிதளவு
மிளகு - ½ TSP
இஞ்சி - ½ TSP
முந்திரி - 7 to 8
செய்முறை:
பொன்னி பச்சரிசி மற்றும் பாசிபருப்பை ஒரு மணி நேரம் ஊறவைக்க வேண்டும். அதன்பின்னர், இரண்டையும் ஒன்றாக சேர்த்து குக்கரில் போட்டு, 5 கிளாஸ் தண்ணீர், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து மூன்று விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும். பொங்கல் நன்றாக வெந்ததும், சிறிது நெய் சேர்த்து கலக்க வேண்டும். பின்னர், அடுப்பில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சூடு படுத்த வேண்டும். அதன்பின்னர், மிளகு, சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை, முந்திரி பருப்பு, பெருங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். முந்திரி பருப்பு பொன்னிறத்திற்கு மாறியதும், இவற்றை பொங்கலுடன் சேர்த்து கலக்கி, ஒரு தட்டு கொண்டு சுமார் 10 நிமிடங்கள் மூடிவிட வேண்டும். இவ்வாறு செய்தால் சுவையான வெண் பொங்கல் தயாராகி விடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“