சுவையான பூரி செய்யும் எளிமையான வழிமுறை குறித்து இப்பதிவில் காணலாம். இதன் மூலம் கடைகளில் இருக்கும் பூரி போன்று உப்பலாக வரும்.
தேவையான பொருள்கள்:
கோதுமை மாவு,
ரவை,
உப்பு,
செய்முறை:
மூன்று கப் அளவிற்கு கோதுமை மாவு எடுத்துக் கொள்ள வேண்டும். கால் கப் அளவிற்கு ரவை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒன்றரை டீஸ்பூன் அளவிற்கு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் சேர்த்து கலக்க வேண்டும்.
பின்னர், சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். குறிப்பாக, சப்பாத்தி மாவை விட சற்று இறுக்கமாக பிசைந்து கொள்ள வேண்டும். இதன் பதம் மிகவும் மிருதுவாகவும் இருக்கக் கூடாது, கையில் ஒட்டும் அளவிற்கும் இருக்கக் கூடாது. பூரி மாவை அதிக நேரம் ஊற வைக்க வேண்டும் என்ற தேவையில்லை.
சிறிய உருண்டைகளாக மாவை உருட்டிக் கொள்ள வேண்டும். இதனிடையே, எண்ணெய்யை அடுப்பில் காய வைக்க வேண்டும். எண்ணெய்யில் இருந்து புகை வரும் அளவிற்கு காய வைக்க வேண்டும். இதன் பின்னர், ஒவ்வொரு பூரியாக சுட்டு எடுக்கலாம். இரு பக்கங்களையும் 1 நிமிடத்தில் சுட்டு எடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் உப்பலான பூரி தயாராகி விடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“