மதிய உணவுக்கு சுவையான சைட்டிஷ் இருந்தால் சூப்பராக இருக்கும் என்று எல்லோரும் நினைப்பார்கள். அந்த வகையில் தயிர் சாதம் மற்றும் ரசம் சாதம் என அனைத்திற்கும் ஏற்ற வகையில் உருளைக் கிழங்கு மசாலா வறுவல் ரெசிபியை இதில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
உருளைக் கிழங்கு,
மல்லி விதைகள்,
சோம்பு,
மிளகு,
சீரகம்,
வரமிளகாய்,
பட்டை,
ஏலக்காய்,
கிராம்பு,
பொட்டுக் கடலை,
எண்ணெய்,
வெங்காயம்,
கறிவேப்பிலை,
கடுகு மற்றும்
உப்பு.
செய்முறை:
அடுப்பில் கடாய் வைத்து அதில் மல்லி விதைகள், சோம்பு, மிளகு, சீரகம், வரமிளகாய், சிறிய துண்டு பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து வறுக்கவும். இத்துடன் ஒரு ஸ்பூன் பொட்டுக் கடலை சேர்க்கலாம். அதன் பின்னர், இவை அனைத்தையும் மிக்ஸியில் பொடியாக அரைக்க வேண்டும்.
இப்போது, அடுப்பில் இருக்கும் கடாயில் எண்ணெய் ஊற்றவும். இதில், பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கடுகு மற்றும் உப்பு சேர்த்து வதக்க வேண்டும். இத்துடன் வேகவைத்த உருளைக் கிழங்கு, அரைத்த மசாலா சேர்த்து மிதமான சூட்டில் வதக்க வேண்டும்.
இதன் மசாலா முழுவதும் வேகும் வரை வதக்கி எடுத்தால் சூப்பரான உருளைக் கிழங்கு மசாலா வறுவல் ரெடியாகி விடும். இது லஞ்ச்-க்கு ஏற்ற டேஸ்டியான சைட்டிஷ்-ஆக இருக்கும்.