சிக்கன், மட்டனுக்கே டஃப் கொடுக்கும் விதமாக இருக்கக் கூடிய சூப்பரான உருளைக் கிழங்கு மசாலா செய்முறையை இதில் காண்போம். இதன் சுவையும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பத்தக்க வகையில் இருக்கும்.
தேவையான பொருட்கள்:
உருளைக் கிழங்கு - 3,
வெங்காயம் - 1,
கறிவேப்பிலை - தேவையான அளவு,
கொத்தமல்லி விதைகள் - ஒரு டேபிள்ஸ்பூன்,
சோம்பு - ஒரு டேபிள்ஸ்பூன்,
பட்டை - சிறிதளவு,
கிராம்பு - 1,
ஏலக்காய் - 1,
காய்ந்த மிளகாய் - 5,
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்,
சீரகம்,
மிளகு.
செய்முறை:
அடுப்பில் கடாய் வைத்து அதில் கொத்தமல்லி விதைகள், சோம்பு, மிளகு, காய்ந்த மிளகாய், பட்டை, ஏலக்காய் மற்றும் கிராம்பு சேர்த்து வறுக்க வேண்டும். இவற்றை நன்றாக வறுத்த பின்னர், அத்துடன் சிறிது பொட்டுக் கடலை சேர்த்து அரைக்க வேண்டும்.
இதையடுத்து, அடுப்பில் இருக்கும் கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். இது பொந்நிறமாக மாறி வரும் போது தேவையான அளவு உப்பு மற்றும் வேகவைத்த உருளைக் கிழங்கு சேர்த்து வதக்கலாம்.
இதன் பின்னர், ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் மசாலாவை இதில் சேர்த்து கலக்கவும். இந்தக் கலவையை மிதமான சூட்டில் வேக வைத்து எடுத்தால் சுவையான உருளைக் கிழங்கு மசாலா தயாராகி விடும். இதனை தயிர் சாதத்திற்கு சேர்த்து சாப்பிடும் போது அட்டகாசமாக இருக்கும்.