குழந்தைகள் விரும்பும் வகையில் ஒரு சூப்பரான லஞ்ச் ரெசிபியை இதில் காணலாம். இந்த உருளைக் கிழங்கு சாதம் செய்வதற்கு மிக எளிதாக இருக்கும். மேலும், இதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
எண்ணெய்,
உருளைக் கிழங்கு,
உப்பு,
மஞ்சள் தூள்,
மிளகாய் தூள்,
கடுகு,
உளுந்து,
கடலை பருப்பு,
கறிவேப்பிலை,
வெங்காயம்,
தக்காளி,
சாதம் மற்றும்
மிளகுத் தூள்.
செய்முறை:
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளலாம். இதில் சிறியதாக நறுக்கி வைத்திருக்கும் உருளைக் கிழங்கு, உப்பு, மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
இதனை இரண்டு நிமிடங்களுக்கு வதக்கிய பின்னர், உருளைக் கிழங்கை தனியாக பிரித்து எடுத்துக் கொள்ளலாம். பின்னர் இதே பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கடலை பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து பொறிக்க வேண்டும்.
இதையடுத்து, பொடியாக நறுக்கிய வெங்காயத்தை இதில் சேர்த்து வதக்க வேண்டும். இது பொந்நிறமாக மாறியதும் பொடியாக வெட்டிய தக்காளி மற்றும் உருளைக் கிழங்கு கலவையை சேர்த்து வதக்கலாம்.
இறுதியாக, தேவையான அளவு மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா தூள் சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை வதக்க வேண்டும். இனி, வடித்து வைத்த சாதத்துடன், தேவையான அளவு மிளகுத் தூள் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான உருளைக் கிழங்கு சாதம் தயாராக இருக்கும்.